'வீட்டை விட்டு ஓடிப் போகலாம் என்றெல்லாம் நினைத்தோம்' - முதன்முதலில் மனம் திறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்

By krithika · 2/1/2025

முதன்முறையாக தனது காதல் மட்டும் திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணிநடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றிருந்தார். தற்போது பாலிவுட்டில் கால் பதித்துள்ள கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் வெளியான 'பேபி ஜான்' படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் 'தெறி 'படத்தின் ரீமேக் ஆகும். வருண் தவான் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை இயக்குனர் அட்லி தயாரித்திருக்கிறார். தற்போது இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

கீர்த்தி சுரேஷ் திருமணம் :

இதற்கிடையே, நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவரது நீண்ட நாள் காதலருக்கும் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் பிரபல நடிகர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். தற்போது முதன் முதலாக தனது காதல் கதையைபேட்டி ஒன்றில் கீர்த்தி பகிர்ந்து இருக்கிறார். அதில், முதன்முதலாக ஆர்குட் சமூக வலைத்தளம் மூலமாக தான் நாங்கள் பேச ஆரம்பித்தோம்.

https://www.youtube.com/watch?v=cLKblPvMVvI

கீர்த்தி சுரேஷ் பேட்டி :

நாங்கள் இருவரும் சுமார் ஒரு மாதம் பேசியிருப்போம். அதற்குப் பிறகு ரெஸ்டாரன்ட் ஒன்றில் நாங்கள் சந்தித்தோம். ஆனால், அப்போது நான் என்னுடைய குடும்பத்துடன் இருந்ததால் என்னால், ஆண்டனியிடம் பேச முடியவில்லை. ஆண்டனியை பார்த்து நான் கண்ணை மட்டும் அசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன். அதற்குப் பிறகு, நானேதான் அவரிடம் 'உனக்கு தைரியம் இருந்தால் எனக்கு ப்ரபோஸ் செய்' என்று கூறினேன்.

காதல் கதை :

மேலும், கடந்த 2010 ஆம் ஆண்டு முதன்முறையாக அவர் என்னிடம் காதலை வெளிப்படுத்தினார். தற்போது 15 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், 2016 இல் இருந்து தான் நாங்கள் இருவரும் தீவிரமாக காதலிக்க ஆரம்பித்தோம். அவர் எனக்கு கொடுத்த மோதிரத்தை இன்று வரை நான் கழட்டவில்லை. அந்த மோதிரத்தை நீங்கள் என்னுடைய அனைத்து படங்களிலும் பார்க்க முடியும். எனது திருமணத்திலும் நான் அதை அணிந்திருந்தேன். எங்கள் திருமணம் ஒரு கனவு போன்றது.

திருமணம் குறித்து :

முதலில் நாங்கள் வீட்டை விட்டு ஓடிப் போகலாம் என்றெல்லாம் கூட யோசித்தோம். இப்போது என்னுடைய மனம் நிறைந்து விட்டது. எங்கள் திருமணம் எங்களுக்கு ஒரு எமோஷனலான தருணம். ஆண்டனி என்னைவிட ஏழு ஆண்டுகள் மூத்தவர். நான் 12-ம் வகுப்பு படிக்கும் போது அவர் கத்தாரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆறு ஆண்டுகள் தொலைவிலிருந்து காதலித்தோம். எங்களை இணைத்தது கொரோனா டைம் தான். அவர் என்னுடைய கேரியருக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். அவர் கிடைப்பதற்கு நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full