கீர்த்தி சுரேஷா இப்படி ஒரு உடையில் - அதுவும் சைடு போஸ்ல ஜிவ்வுனு இருக்காங்களே.

By Rajkumar · 28/2/2021

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். தனது அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதிலும் கீர்த்திசுரேஷ் தெலுங்கில் நடித்த மகாநதி திரைப்படம் கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது அதைத்தொடர்ந்து அம்மணியின் புகழ் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நடிப்பதாக இருந்த படம் கைநழுவி போனது இருப்பினும் பாலிவுட்டில் இன்னொரு படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.இப்படி ஒரு நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்லீவ் லெஸ் உடையில் கொஞ்சம் கிளாமரான போஸ்களை கொடுத்துள்ளார். இதை பார்த்த பலரும் சைடு போஸ்ல ஜிவ்வுனு இருக்காங்களே என்று வர்ணித்து வருகின்றனர்.

https://twitter.com/TCinewoods/status/1365968698557698056

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டாரின் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. `முள்ளும் மலரும்' படம்போல ரஜினி நடிக்கும் அண்ணண் - தங்கச்சி சென்ட்டிமென்ட் கதை இது. ரஜினிக்குத் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரஜினியின் மனைவியாக நயன்தாராவும், ரஜினியின் முறைப்பெண்களாக குஷ்புவும், மீனாவும் நடிக்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full