'தேசிய விருது' வாங்கிய மகாநதி படத்தை முதலில் நிராகரித்துள்ள கீர்த்தி சுரேஷ், காரணம் இதுதான்

By krithika · 4/1/2025

தமிழ் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை ப் பெற்றது.'மகாநதி' படத்தில் முதலில் கீர்த்தி சுரேஷ் நடிக்க மறுத்திருக்கும் செய்திதான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். முதலில் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் தான் இவர் அறிமுகமானார். தமிழில் இவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் 'இது என்ன மாயம்' . இப்படத்தை தொடர்ந்து இவர் ரஜினி முருகன், ரெமோ, பைரவா, மகாநதி, அண்ணாத்தே மாமன்னன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல படங்களில் தற்போது இவர் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் ஹிந்தியில் இவர் அறிமுகம் ஆகியிருந்த முதல் படம் 'பேபி ஜான்' வெளியானது.

பேபி ஜான் :

தமிழில் இயக்குனர் அட்லீ இயக்கி, தளபதி விஜய் நடித்த பயங்கர ஹிட்டான படம் தான் 'தெறி '. தற்போது இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்குனர் அட்லீ 'பேபி ஜான்' என்ற பெயரில் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வருண் தவான் உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் காளீஸ் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு, கடந்த டிசம்பர் 25ஆம் தேதி ரிலீசானது.

https://www.youtube.com/shorts/CGJKeyEFW70

கீர்த்தி சுரேஷ் திருமணம் :

பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கிடையே, நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவரது நீண்ட நாள் காதலருக்கும் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் பிரபல நடிகர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டியில் 'மகாநதி' படம் குறித்து சில விஷயங்கள் கூறியிருக்கிறார்.

மகாநதி குறித்து:

அதில், மகாநதி படுத்தின இயக்குனர் நாக் அஸ்வின் எனக்கு கதையை கூறும்போது நான் நடிக்க மறுத்து விட்டேன். அதற்கு முக்கிய காரணம் சாவித்ரி அம்மாவின் கதாபாத்திரத்தை நான் சரியாகத் திரையில் கொண்டு வர முடியுமா என்கிற பயம் தான். ஆனால், தயாரிப்பாளர்கள் ஸ்வப்னாவும், பிரியங்காவும் என் பதிலை கேட்டு, 'என்ன இந்த பொண்ணு, இது போன்ற வாய்ப்பை வேண்டாம் என்கிறார்' என்பது போல் அதிர்ச்சி அடைந்தார்கள்.

தேசிய விருது வென்றது:

அதற்குப் பிறகுதான் அவர்கள் பேசி என் மனதை மாற்றி நடிக்க வைத்தார்கள் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். கீர்த்தி சுரேஷின் திரை பயணத்தில் ஒரு முக்கியமான படம் என்றால் அது 'மகாநதி' தான். இப்படம் பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாகும். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மேலும், படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full