படப்பிடிப்பில் ஒரு நடிகர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார் - நடிகை குஷ்பூ வைத்த பகிர் குற்றச்சாட்டு
பிரபல நடிகை குஷ்பூ தன்னிடம் ஒரு நடிகர் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் குஷ்பூ. இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் அவர். இவர் சினிமா திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக முதன் முதலில் அறிமுகம் ஆகி இருந்தார். பின், அதன்பின் 1989 ஆம் ஆண்டு 'வருஷம் 16' என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
அதன் பின், இவர் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கியிருந்தார். மேலும், சினிமா உலகில் 90 ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பூ. அதோட ரசிகர்கள் குஷ்பூ மீது உள்ள பற்றின் காரணமாக அவருக்கு கோயில் ஒன்று கட்டி உள்ளார்கள். பின், சினிமா வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பழமொழி படங்களில் நடித்து வருகிறார்.
குஷ்பூ திரைப்பயணம்:
அதுவும் இவர் படங்களில் குணசித்திர வேடங்களிலும், சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இதனிடையே குஷ்பு கடந்த 2000 ஆம் ஆண்டு பிரபலமான இயக்குனர் சுந்தர். சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள். தற்போது அவர்களுடைய இரண்டு மகள்களும் படித்து முடித்துவிட்டு தங்களுடைய வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
குஷ்பூ மகள்கள்:
அதிலும், குஷ்பு உடைய மூத்த மகள் அவந்திகா சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்து முடித்திருக்கிறார். இவர் விரைவில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இரண்டாவது மகள் அனந்திகா தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும், குஷ்பூ அவர்கள் நடிப்பு மீது கவனம் செலுத்தி வந்தாலும், அரசியலிலும் அதிக வரம் காட்டி வருகிறார்.
சர்வதேச திரைப்பட விழா:
தற்போது இவர் பாஜக வில் முக்கிய பொறுப்பை வகித்து வருகிறார். இந்நிலையில் கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், திரைத்துறையில் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் பெண்கள் சவால்களைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். யாரோ ஒருவர் தங்களை தவறாக நடத்துவதாக உணரும்போது, பெண்கள் அது குறித்து வெளிப்படையாக பேச முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=RAwwhQmWtpA
குஷ்பு கூறியது:
மேலும், நீண்ட நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது தன்னிடமே ஒரு ஹீரோ தவறான கண்ணோட்டத்துடன் நெருங்கியதாக கூறியிருக்கிறார். ஆனால், தான் துணிந்து அந்த நடிகரை எச்சரித்து அனுப்பியதாக அவர் தெரிவித்திருக்கிறார். தன்னிடம் தவறாக நடந்து கொண்ட நடிகர் யார், எப்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது என்பது பற்றிய தகவல்கள் குஷ்பு குறிப்பிடவில்லை . ஆனால், தன்னிடம் ஒரு நடிகர் தவறாக நடக்க முயற்சித்ததாக, குஷ்பு பொதுவெளியில் குற்றம் கூறி இருக்கும் சம்பவம் திரையுலகில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.