வீட்டில் நிகழ்ந்த திடீர் மரணத்தால் மனமுடைந்து போன குஷ்பு - சோகத்தில் அவர் போட்ட பதிவு.

By subhashini · 27/4/2023

வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணத்தால் மணமடைந்து குஷ்பு பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு. அந்த காலத்திலேயே இவருக்கு ரசிகர்கள் சிலை வைத்தார்கள். மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.

பின் 1989ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது குஷ்பூ அவர்கள் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார்.

குஷ்பூ திரைப்பயணம்:

இவர் சினிமா படங்களில் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும், நடிகையாகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘அண்ணாத்த’ படத்தில் குஷ்பூ நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூலும் வாரி குவித்து இருந்தது. இதனை தொடர்ந்து குஷ்பூ பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

அரசியலில் குஷ்பூ :

அதன் பின் இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மீரா என்ற சீரியலில் நடித்து இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே குஷ்பு அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். முதலில் திமுக-வில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி இருந்தார் குஷ்பு. அதன் பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். தற்போது இவர் பாஜக செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். மேலும், குஷ்பு கட்சிப் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார்.

குஷ்பூ வீட்டில் நடந்த சோகம்:

அது மட்டுமில்லாமல் இவருடைய ட்விட்டர் பக்கம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கு. இந்த நிலையில் நடிகை குஷ்பூ சோகத்தில் பதிவிட்டிருக்கும் ட்விட் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, நடிகை குஷ்பூ தன்னுடைய வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்திருக்கிறார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இந்த நாய் இவர்களுடைய குடும்பத்தில் ஒரு அங்கமாக வளர்ந்திருக்கிறது. அந்த நாயின் உடைய பெயர் ஸ்நூபி. தற்போது அந்த நாய் இறந்திருப்பது குஷ்பூ மற்றும் அவருடைய குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

குஷ்பூவின் டீவ்ட்:

இதனை அடுத்து குஷ்பூ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த நாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் எங்களில் ஒருவராய் நீ இருந்தாய். ஒரு கூச்ச சுபாவம் உள்ள நாய்க்குட்டியாக எங்களிடம் வந்த நீ எங்கள் இதயத்தில் நீங்கா இடம் பிடித்து விட்டாய். உனது புரிதல், நீ காட்டும் நிபந்தனையற்ற அன்பு, உன் புன்னகை, கோபம், பாதுகாக்கும் இயல்பு உள்ளிட்ட அனைத்து குணங்கள் எங்கள் மனதை கவர்ந்தது. உன் இறப்பால் நாங்கள் மனமுடைந்து போய் உள்ளோம். நீ நிம்மதியாக இருப்பாய் என நம்புகிறோம். மிஸ் யூ ஸ்நூபி. உன்னை போல் யாரும் இருக்க முடியாது. ஐ லவ் யூ பட்டு. கடவுளே தயவு செய்து அவனை பார்த்துக்கொள் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full