அப்போ 20 கிலோவை 2 மாசத்துல கொறச்சேன் - ஜெமினி படத்திற்கு முன் கிரண் நடத்திய முதல் போட்டோ ஷூட்.

By Rajkumar · 7/2/2021

தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'ஜெமினி' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கிரண். அதன் பின்னர் அஜித்தின் 'வில்லன்', கமலஹாசனின் 'அன்பே சிவம்' போன்ற படங்களில் நடித்து வந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்த இவருக்கு கவர்ச்சி நாயகியாக அங்கிகாரம் கிடைத்தது என்னவோ பிரசாந்த் நடிப்பில் வெளியான 'வின்னர்' படத்தில் தான்.அந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் பிகினி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்தார் நடிகை கிரண்.ஆனால் அந்தப் படத்திற்கு பின்னர் அம்மணிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தமிழில் ஒரு சிலகாலம் காணாமல் போன கிரண் கடந்த 2015 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான 'ஆம்பள' திரைப்படத்தில் விஷாலின் அத்தையாக நடித்திருந்தார்.இறுதியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'முத்தின கத்திரிக்காய்' படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார் கிரண். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வின்னர் படத்தில் பிகினி உடை அணிந்தது குறித்து விளமளித்திருந்த கிரண், படப்பிடிப்பின் போது என் எடை குறித்து தான் மிகவும் பயமாக இருந்தது.

ஆனால், பாடலும் படமும் வெற்றி பெற்றது.மேலும் பல ரசிகர்கள் இதுபோன்ற காட்சிகளைக் கொடுத்து ஏமாற்றி விட்டேன் என்று எனக்குத் தெரியும்.ஆனால் எல்லாம் நன்றாக முடிவடையும் போது. உண்மையில் இதை இன்னும் சரியான சம்மர் உடலுடன் செய்வேன் என்று கூறி இருந்தார். ஆனால், தனது உடல் எடையை குறைக்க படாதபாடு பட்டு வருகிறார் கிரண். நடிகை கிரண் அறிமுகமான 'ஜெமினி' படத்திலேயே கொஞ்சம் பபலியா்ன தொட்ற்றத்தில் தான் இருந்தார். அதன் பின்னர் வந்த படங்களில் கூட இவர் அதே தோற்றத்தில் தான் இருந்தார்.

ஆனால், இவர் ஜெமினி படத்திற்கு முன்பாகவே இந்தி மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார். இந்தி படங்களில் அறிமுகமான போது நடிகை கிரண் படு ஸ்லிம்மாக தான் இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஜெமினி படத்திற்கு முன்பாக எடுத்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஆரம்ப காலத்தில் 20 கிலோவை 2 மாதத்தில் குறைத்தேன். ஆனால், இப்போதோ 2கிலோவை குறைக்க 2 மாதங்கள் ஆகிறது. நம்மை நாம் நம்பும் போது நம் அழகாக தெரிவோம். கண்மூடித்தனமாக மற்றவர்கள் செல்வதை கேட்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full