அப்படி ஆடை போட என்னை அவங்க இத்தனை மாசம் சமாதானம் செஞ்சாங்க - ஷாக் கொடுத்த கிரண்.

By Rajkumar · 1/6/2020

தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'ஜெமினி' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கிரண். அதன் பின்னர் அஜித்தின் 'வில்லன்', கமலஹாசனின் 'அன்பே சிவம்' போன்ற படங்களில் நடித்து வந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்த இவருக்கு கவர்ச்சி நாயகியாக அங்கிகாரம் கிடைத்தது என்னவோ பிரசாந்த் நடிப்பில் வெளியான 'வின்னர்' படத்தில் தான். அந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் பிகினி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்தார் நடிகை கிரண்.

https://www.youtube.com/watch?v=4mf-8W6BZdk

ஆனால் அந்தப் படத்திற்கு பின்னர் அம்மணிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தமிழில் ஒரு சிலகாலம் காணாமல் போன கிரண் கடந்த 2015 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான 'ஆம்பள' திரைப்படத்தில் விஷாலின் அத்தையாக நடித்திருந்தார்.இறுதியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'முத்தின கத்திரிக்காய்' படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார் கிரண். இந்த நிலையில் வின்னர் படத்தில் தான் அணிந்த பிகினி உடை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கிரண்.

அதில், பிகினி ஷாட் செய்ய முயற்சித்த எனது முதல் மற்றும் கடைசி முயற்சி இது தான். தயாரிப்பாளர்கள் என்னை டூபீஸ் அணிய 6 மாதங்கள் என்னை சமாதானம் செய்தனர். ஆனால், இதை அணியும்போது இன்னும் பல கேள்விகள் என் தலையில் இருந்த. இதை அணிந்துகொள்வதில் சிக்கல் இல்லை படப்பிடிப்பின் போது என் எடை குறித்து தான் மிகவும் பயமாக இருந்தது. ஆனால், பாடலும் படமும் வெற்றி பெற்றது. மேலும் பல ரசிகர்கள் இதுபோன்ற காட்சிகளைக் கொடுத்து ஏமாற்றி விட்டேன் என்று எனக்குத் தெரியும்.

https://www.instagram.com/p/CA2NSd5g_XU/

ஆனால் எல்லாம் நன்றாக முடிவடையும் போது. உண்மையில் இதை இன்னும் சரியான சம்மர் உடலுடன் செய்வேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே நடிகை கிரண் சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போஸ்களை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் வின்னர் படத்தில் வருவது போல பிகினி உடையில் போஸ் கொடுப்பேன் என்று உறுதி செய்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் கிரண்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full