பலர் பசியால் வாடிக்கொண்டு இருக்கும் போது, இந்த வீடியோக்களை எல்லாம் சமூக வளைத்தளத்தில் பதிவிடாதீர்கள்- நடிகை குஷ்பூ.

By Rajkumar · 25/4/2020

உலகமெங்கும் தற்போது 'கொரோனா' எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், '144' போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

'கொரோனா' பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல முன்னணி நடிகர்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை ஷேர் செய்த வண்ணமுள்ளனர். அதில் பாட்டு பாடுவது, சமைத்து கொண்டிருப்பது, ஜிம்மில் வொர்க்கவுட் செய்வது, பாடலுக்கு நடனமாடுவது, டிக் டாக் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வெளியாகி வருகின்றது.

https://twitter.com/khushsundar/status/1253761419322912768

இந்நிலையில், இது தொடர்பாக பிரபல நடிகை குஷ்பூ சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அந்த பதிவில் "சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்படும் பல பதிவுகளில், அவர்கள் தங்களது வீட்டில் சமைக்கும் உணவு வகைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கிறேன்.

நாம் சாப்பிடும் தட்டில் உணவு இருப்பதால், நாமெல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால், 'கொரோனா' லாக் டவுன் எனும் இப்படி பட்ட ஒரு கொடுமையான சூழலில் பலர் ஒரு வேளை உணவு சாப்பிடுவதற்கே மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், அதை மனதில் கொண்டு நீங்கள் சாப்பிடுங்கள்.. ஆனால், அதை புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து பகிர வேண்டாம்" என்று நடிகை குஷ்பூ தெரிவித்திருக்கிறார்.

இப்போது 'அண்ணாத்த' என்ற ஒரு தமிழ் திரைப்படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை குஷ்பூ. இந்த படம் அவருக்கு மிகவும் ஸ்பெஷல். ஏனெனில், இதில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தினை பிரபல இயக்குநர் சிவா இயக்குகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full