அடையாளம் தெரியாமல் குண்டாக மாறிய குட்டி ராதிகா - புகைப்படம்உள்ளே !

By Ajju · 16/3/2018
தமிழில் 2003 இல் ஷாம் நடிப்பில் வெளிவந்த இயற்கை படத்தில் நடித்தவர் ராதிகா குமாரசாமி. இவர் தமிழ் படத்தில் நடித்தால் குட்டி ராதிகா என்று அழைக்கப்பட்டார். 1986 ஆம் கர்நாடகா மாநிலம் மங்களுரில் பிறந்த இவர் தனது 13வது வயதிலேயே 2002 இல் நிணங்கி என்ற கன்னட படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆக அதே ஆண்டில் 5 படங்களில் இவர்க்கு வாய்ப்பு கிடைத்தது . பின்னர் ரத்தன் குமார் என்ற நபர் தனக்கும் ராதிகாவிற்கும் 2000 இல் திருமணம் நடந்ததாகவும் தற்போது ராதிகா நடிகையாக இருப்பதால் அவரது தந்தை தேவராஜ் ராதிகாவிற்கு திருமணம் நடந்ததை மறைப்பதாகவும் வழக்கு பதிவு செய்தார்.இதனால் ராதிகாவிடம் விசாரணை நடத்தப்பட்டது பின்னர் 2002 இல் ரத்தன் குமார் மாரடைப்பால் காலமானார் என்று செய்திகள் வந்தது. அதற்கு பிறகு ராதிகா கன்னடம், மலையாளம் ,தமிழ் என பல படங்களில் நடித்துவந்தார். இவர் தமிழில் மட்டும் 5 படங்களில் நடித்துள்ளார். 2008 வரை படங்களில் நடித்து வந்த ராதிகா அதன் பின்னர் 2 ஆண்டுகள் என்ன ஆனார் என்று தெரியவில்லை பின்னர் திடீர் என்று 2010 இல் தமக்கும் கன்னட முதலமைச்சர் குமாரசாமிக்கும் 2006 இல் திருமணமாகிவிடத்தாகவும் தங்களுக்கு ஷமிகா என்ற ஒரு பெண் குழந்தயும் உள்ளது என்று கூறி பெரும் சர்ச்சையை கிளம்பினார் குட்டி ராதிகா. நீண்ட இடைவெளிக்கு பிறகு 2013 இல் மீண்டும் படங்களில் நடிக்கத்துவங்கிய குட்டி ராதிகா தற்போது காண்ட்ராக்ட்,பைர தேவி, ராஜ போபண்ணா போன்ற கன்னட படங்களில் நடித்து வருகிறார்.
behindtalkies AMP · Quick view
View full