'இப்போவே இப்படி பண்ணது இன்னும் நடிச்சா' பூஜை அன்றே லைலாவை VIP படத்தில் இருந்து தூக்கிய தாணு

By Arun · 22/7/2024

தயாரிப்பாளர் மீது வந்த கோபத்தால் பிரபுதேவா பட வாய்ப்பை நடிகை லைலா இழந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் பிரபுதேவா. இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகம் கொண்டவர். இவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று தான் பலரும் அழைப்பார்கள். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

அந்த வகையில் கடந்த 1997 ஆம் ஆண்டு சபாபதி தட்சிணாமூர்த்தி இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியாகி இருந்த படம் 'விஐபி'. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தான் தயாரித்திருந்தார். இந்த படத்தில் சிம்ரன், ரம்பா அப்பாஸ், மணிவண்ணன், அனு மோகன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தில் முதன் முதலில் சிம்ரன் ரோலில் கமிட்டாகி இருந்தவர் லைலா தான். லைலா படத்திற்காக தேர்வாகி பூஜைக்கு எல்லாம் வந்திருந்தார்.

தயாரிப்பாளர் செய்த வேலை:

படத்தின் பூஜைக்கான இன்விடேஷனில் கூட லைலா, ரம்பா என்றுதான் அச்சிடப்பட்டிருந்தது. மேலும், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, லைலா பூஜைக்கு வருவதற்கு முன்பே அவருக்கான அட்வான்ஸ் பணத்திற்கான செக்கை கையெழுத்து போட்டு பூஜை நடந்த ஹோட்டல் ஒன்றின் ரிசப்ஷனில் கொடுத்துவிட்டு சென்றிருந்தார். லைலா தாமதமாகத்தான் வந்தார். அந்த செக்கை ரிசப்ஷனில் இருந்தவர்கள் லைலாவிடம் கொடுத்தார்கள்.

பட வாய்ப்பு இழக்க காரணம்:

உடனே லைலா, தயாரிப்பாளர் என்னை பார்க்கவே இல்லையே? எந்த தயாரிப்பு நிறுவனம்? என்னை பார்க்காமல் செக் கொடுத்தார்கள் என்றால் என்ன அர்த்தம் என்று எல்லாம் கேட்டிருந்தார். இதை கலைப்புலி தாணுவிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆரம்பத்திலேயே இவர் இப்படி பேசுகிறாரே, எப்படி அவருடன் பயணிப்பது என்று அவரை படத்திலிருந்து நீக்கி இருக்கிறார். அதற்குப் பிறகு அந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது தான் சிம்ரன் தேர்வாகி இருந்தார். அதுமட்டுமில்லாமல் நடிகை சிம்ரனுக்கு தமிழில் முதல் படம் விஐபி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

லைலா குறித்த தகவல்:

கோலிவுட் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லைலா. விஜயகாந்த்தின் நடிப்பில் வெளியான ‘கள்ளழகர்’ என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார். ஆனால், இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பாகவே இந்தி, தெலுங்கு, உருது, மலையாளம் என்று பல்வேறு படங்களில் நடித்து இருந்தார்.

லைலா திரைப்பயணம்:

இடையில் சினிமா வாய்ப்பு குறையை தொடங்கியவுடன் இவர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். மேலும், நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த 'சர்தார்' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து லைலா படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'கோட்' படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் 'சர்தார் 2' படத்திலும் அவர் கமிட்டாகி நடித்து வருவதாக கூறப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full