இது அரசு விருதா இல்ல உங்க குடும்ப விருதா? ஆவேசத்தில் செம்பருத்தி சீரியல் நடிகை லட்சுமி வெளியிட்ட வீடியோ

By subhashini · 3/2/2026

சமூக சிந்தனைகளுடன் மனிதநேயத்தை பிரதிபலிக்கும் படங்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த படங்கள், நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சின்ன திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிறந்த தொடர்கள், கதாநாயகன், கதாநாயகி, சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் உட்பட பல பிரிவுகளில் சின்னத்திரை விருதுகளும் வழங்கப்படுகின்றது.

அந்த வகையில் தமிழ்நாடு அரசு 2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014-2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015-16 முதல் 2021-2022 வரையான கல்வி ஆண்டுகளுக்குரிய எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் ஆகியவற்றை அறிவித்திருக்கிறது. இந்த நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கத்தில் வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் துவக்கி வழங்குகிறார்.

தமிழ்நாடு அரசு விருது:

மேலும், ஜீ தமிழ் சேனலில் வரலாற்றில் முதல் முறையாக டிஆர்பியில் பெரிய வரவேற்பு பெற்ற செம்பருத்தி தொடருக்கு சிறந்த தொடர்கான விருது, ஹீரோ கார்த்தி, ஹீரோயின் ஷாபனா, அறிமுக நடிகர் கதிர் என பல பிரிவுகளில் விருதுகள் கிடைத்திருக்கிறது. அதே நேரம் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரியா ராமன், வில்லியாக நடித்த லட்சுமி இருவருக்கும் எந்த விருதும் கொடுக்கவில்லை.

லட்சுமி வீடியோ:

இதனால் தன்னுடைய கோபத்தை லட்சுமி வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், அந்த செம்பருத்தி சீரியலுக்காக நான் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்தேன். அந்த சீரியலில் நடித்த காலத்தை தவம் காலம் என்று சொல்லலாம். ஆனால், எப்படி என்னை தேர்ந்தெடுக்காமல் போனார்கள் என்று தெரியவில்லை. விருது கமிட்டியில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டிய நடிகர்களுக்கு மட்டும் அறிவித்து விடுகிறார்கள். சின்னத்திரை நடிகர் சங்கத்தினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். சங்கத்தில் சேர சொல்கிறீர்கள்.

View this post on Instagram

A post shared by Y Not News (@y_not_media_official)

விருது பற்றிய விமர்சனம்:

அதனால் நடிகர்களுக்கு என்ன பயன்? பரிந்துரை செய்பவர்கள் தருகிற லிஸ்ட்டை கண்ணை மூடிக்கொண்டு அரசாங்கமும் ஓகே சொல்வது ஏன்? இது ரொம்பவே அநியாயம். நான் நல்லா நடித்து இருந்ததால் தான் எனக்கு விருது இல்லையா? என்று நான் கேள்வி கேட்கிறேன். இனிமேலாவது இந்த மாதிரி நடக்காமல் நேர்மையாக விருது வழங்க முயற்சி செய்யுங்கள். அப்பொழுது தான் அந்த விருதுக்கு பெருமை என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full