முதன் முறையாக நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்ட லட்சுமி மேனன்.

By Rajkumar · 3/11/2020

இன்ஸ்டாகிராம் சேட்டிங்கின் போது ஹாட் போட்டோவை கேட்ட நபருக்கு நடிகை லட்சுமி மேனன் தக்க பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது. இதனை தொடர்ந்து சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

https://twitter.com/KTownReporter/status/1322450282668699648

பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ரெக்க என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2016ம் ஆண்டு வெளி வந்தது. அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் நடிகை லட்சுமி மேனன் அவர்கள் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார். சமீபத்தில் நடிகை லட்சுமி மேனனின் சில புகைப்படங்கள் வைரலானது.

அதில் உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக இருந்த லட்சுமி மேனனை பார்த்து பலரும் வியந்து போனார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சொன்ன கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இப்படி ஒரு நிலையில் நடிகை லட்சுமிமேனன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் நீச்சல் குளத்தில் குளித்த வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது லட்சுமி மேனன் கவுதம் கார்த்திக்குடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் லட்சுமி மேனனின் ரீ - என்ட்ரி இவருக்கு ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full