வொர்க் அவுட்டெல்லாம் செய்ய மாட்டேன் ! ஸ்லீம் ஆக இவர் தான் காரணம் ! லட்சுமி மேனன்

By Ajju · 13/12/2017
சினிமா ஃபீல்டுலதான் இருக்கேன். எனக்குப் பிடிச்ச கேரக்டர் அமையும் படங்கள்ல நிச்சயம் நடிப்பேன். அப்படித்தான் இப்போ 'யங் மங் சங்' படம் மூலமா சீக்கிரமே எல்லோரையும் இம்ப்ரஸ் பண்ண வரப்போறேன்" - உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை லட்சுமி மேனன். திடீர்னு வெயிட் கூடினீங்க... இப்ப டக்குனு ஸ்லிம் ஆகிட்டீங்களே. படத்துக்காகவா? டயட்ங்கிற கான்சப்ட்ல எனக்கு எப்பவும் உடன்பாடில்லை. என் பாட்டி சூப்பர் குக். அவங்க சமைச்ச உணவுகளை ரொம்பவே திருப்தியா சாப்பிடுவேன். அதேசமயம் சினிமாவுல நடிக்கிறதால கொஞ்சம் ஸ்லிம்மா இருக்கவேண்டியதும் கட்டாயமா இருக்கு. அதுக்காக ஸ்பெஷல் வொர்க் அவுட்டெல்லாம் செய்ய மாட்டேன். நல்லா ஃபுல் எனர்ஜியோட டான்ஸ் ஆடுவேன். நடுவுல கொஞ்ச நாள் நடிக்காம இருந்ததால, கொஞ்சம் வெயிட் போட்டேன். இப்ப படத்துல கமிட் ஆனதால நல்லா டான்ஸ் ஆடினேன். அதில் அம்மாவின் ஊக்கமும் அதிகம். அதனாலதான் ஸ்லிம்மாகிட்டேன். அவ்ளோதான்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full