நீண்ட வருடங்களுக்கு பின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற லட்சுமி மேனன்- வாயடைத்து போன ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் கேரளா நடிகைகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. அப்படி வந்தவர் தான் தற்போது தமிழ் சினிமாவின் மூலம் தென்னிந்திய திரையுலகை கலக்கும் நயன்தாரா. அதே வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கும்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமனவர் லட்சுமி மேனன்.
கும்கி படத்திற்கு பின்னர் சசிகுமாருடன் 'சுந்தர பாண்டியன்' என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.
ஆரம்ப காலகட்டத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த லட்சுமி மேனன் கொஞ்சம் மாடர்னாக கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், அது அவருக்கு செட் ஆகாததால் படவாய்ப்புகளும் இவருக்குகுறையத் துவங்கின. கடைசியாக விஜய் சேதுபதியின் 'ரெக்க' படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் எந்த படத்திலும் அவரை காணமுடியவில்லை. தற்போது பிரபு தேவாவுடன் எங் மங் ஜங் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லட்சுமிமேனன் தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துள்ளதாகவும் தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் குச்சிப்புடி நடனம் கற்றுவருவதாகவும் கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் தனது உடல் இடையை குறைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லட்சுமி மேனன். இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் சொக்காகியுள்ளனர். மேலும், இவர் நடிப்பில் 'புலிக்குத்தி பண்டி' என்ற படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.