x-வீடியோஸ் நடிகருக்கு கட்டிப்பிடிக்க கற்றுக்கொடுத்த நடிகை.! புகைப்படம் இதோ

By Ajju · 2/7/2018
இயக்குனர் சுஜோ சுந்தர் இயக்கத்தில் சமீபத்தில் இந்தியில் வெளியான " எக்ஸ் வீடியோஸ்" என்ற படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து இந்தி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அர்ஜுன் ஐயங்கார். இவர் ராய் லட்சுமியுடன் முத்த காட்சிகளில் நடித்த போது ஏற்பட்ட ஸ்வாரஸ்யமான சம்பவம் ஒன்றை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். [caption id="attachment_21655" align="aligncenter" width="700"] Telugu Actress Lakshmi Rai Photos @ Ganga Telughu Movie Press Meet[/caption] இந்தி நடிகரான இவர் தமிழில் 2015 ஆம் ஆண்டு வெளியான "புழல்" என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமா துறைக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளியான "பெங்களூரு நாட்கள் என்ற படத்தில் லட்சுமி ராயின் காதலராக நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்த போது நடிப்பு இவருக்கு கொஞ்சம் புதிது என்பதால், லட்சுமி ராய்யுடன் கட்டிப்பிடிக்கும் காட்சிகயிலும் , முத்த காட்சியிலும் நடிக்கும் போது மிகவும் பதட்டமாக இருந்தாராம். ஆனால், நடிகை லட்சுமி ராய் 'வெறும் நடிப்பு தானே பரவாயில்லை ' என்று கூறி அவரை உற்சாகபடுத்தி கட்டிப்பிடிக்க வைத்தாராம்.அதோடு அந்த படத்தில் நடிகர் பாபி சிம்மாவுடன் சண்டை போடும் காட்சிகளில் கூட அதிகப்படியான ரீ டேக் வாங்கி சுதப்பினாராம்.ஆனால், " எக்ஸ் வீடியோஸ்" படத்திற்கு பிறகு அனைவரும் தனது நடிப்பை பாராட்டுகின்றனர் என்று தெரிவித்துள்ளார். சினிமாவில் வருவதற்கு முன்னாள் இவர் மிகவும் கூச்ச சுபாவம் உடையவராம். இவரது நண்பர்கள் இவரை மாடலிங் துறையில் சேர்ந்துகொள் அப்போது தான் உன் கூச்சம் போகும் என்று அறிவுரை வழங்கியதால் தான் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தாராம். அதன் பின்னரே இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full