உடற்பயிற்சியின் போது மாரடைப்பு - நடிகை எம். என். ராஜம் மகள் காலமானார்

By subhashini · 26/7/2024

உடற்பயிற்சியின் போது பழம்பெரும் நடிகை எம்.என் ராஜம் மகள் மாரடைப்பால் இறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர் எம்.என் ராஜம். இவர் 50, 60 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

பெரும்பாலும் இவர் படங்களில் துணை வேடங்களில் தான் நடித்திருந்தார். இவர் தன்னுடைய ஏழு வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். அதற்குப் பிறகு இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்புக்காக பல விருதுகளை வாங்கி இருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தது உடன் இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

எம்.என்.ராஜம் குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் எம்.என்.ராஜம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையை பெற்றவர். இதற்கிடையே இவர் ஏ.எல்.ராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் சினிமாவில் பிரபலமான பின்னணிப் பாடகராக இருந்தவர். மேலும், 50 லிருந்து 70 காலகட்டம் வரை இவரின் பாடல்கள் எல்லாம் மிக பிரபலமாக இருந்தது.

எம்.என்.ராஜம் குடும்பம்:

அதோடு இவர் பாடகர் மட்டுமில்லாமல் சினிமா, சீரியல்களிலும் நடித்திருந்தார். இதற்கிடையில் கோவிட் வந்த போது எம்.என் ராஜம் கணவர் ராகவன் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவஸ்தைப்பட்டு இருந்தார். பின் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மேலும், தன்னுடைய கணவர் இறந்ததற்கு பிறகு எம்.என் ராஜம் நடிப்பிலிருந்து விலகி விட்டார்.

நளினா இறப்பு:

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். அதில் எம்.என் ராஜம் அவர்களின் மகள் நளினா, சரவணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சரவணன் வேற யாரும் இல்லை மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதாவின் மகன் ஆவார். அதோட இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் மைத்துனரும் ஆவார். இப்படி இருக்கும் நிலையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு நளினா இறந்துவிட்டார்.

பிரபலங்கள் இரங்கல்:

இவருடைய இறப்பு செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், தற்போது நளினா உடைய மகன் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் வந்த பிறகுதான் நளினா உடல் அடக்கம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. நளினாவின் மறைவிற்கு பிரபலங்கள் பலர் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full