விஜய் டிவி உடன் பஞ்சாயத்து முடிந்ததா? குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியில் மதுமிதா வந்த காரணம் இது தான்

By subhashini · 4/5/2025

குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து நடிகை மதுமிதா தரப்பில் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே, இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கும். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கியது.

நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் கடந்த முறை நிகழ்ச்சியில் இருந்து விலகி, சன் டிவியில் ஒளிபரப்பான ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றார். அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக குக் வித் கோமாளி 5 நிகழிச்சியில் களம் இறங்கி இருந்தார். கடந்த முறை நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கி இருந்தார்கள். சினிமா, சீரியலை விட இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானோர் தான் அதிகமாக இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்களையும் மீடியா மேஷன்ஸ் என்ற நிறுவனம் தான் தயாரித்திருந்தது.

குக் வித் கோமாளி:

கடந்த ஆண்டு இவர்கள் விஜய் டிவியில் இருந்து வெளியேறி இருப்பதாக அறிவித்திருந்தார்கள். அதோட ஐந்தாவது சீசனையும் தயாரிக்கும் பொறுப்பிலிருந்தும் வெளியேறிட்டார்கள். அதனால் தான் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் விலகி விட்டார். கடந்த சீசன் தான் பல சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியாக இருந்தது. காரணம், பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்து மணிமேகலை -பிரியங்கா இடையே சலசலப்பு ஏற்பட்டு நிகழ்ச்சியை விட்டே மணிமேகலை வெளியேறி விட்டார். அதே போல் டைட்டில் பட்டதை பிரியங்கா தான் பெற்றிருந்தார். இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வருமா? என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவிக் கொண்டிருந்தது.

குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சி:

பின் குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த முறை இரண்டு நடுவர்கள் உடன் மூன்றாவது நடுவராக களமிறங்கி இருக்கிறார் செஃப் கௌஷிக். மேலும், இந்த நிகழ்ச்சி மே நான்காம் தேதி இன்று இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் லட்சுமி ராமகிருஷ்ணன், செம்பருத்தி ஷபானா, பிரியா ராமன், உமர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பது உறுதியாகி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, பல பிரச்சனைகளுக்கு பிறகு விஜய் டிவிக்கு மதுமிதா வந்தது தொடர்பான செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மதுமிதாவிற்கும், விஜய் டிவிக்கும் இடையே நடந்த பஞ்சாயத்து அனைவரும் அறிந்ததே.

குக் வித் கோமாளி மதுமிதா:

மதுமிதா பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். அப்போது இவர் நிகழ்ச்சியின் நடுவிலேயே கையை அறுத்து கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது அனைவருக்கும் தெரியும். ஷெரின், வனிதா ஆகியோருடன் சண்டையினால் தான் இவர் இப்படி செய்ததாக எல்லாம் கூறப்பட்டது. அதற்குப்பின் தன்னுடைய தரப்பு நியாயத்தை சேனல் மற்றும் தயாரிப்பு நிறுவனம் புரிந்து கொள்ளவில்லை என்று மது பேட்டியில் புலம்பி இருந்தார். ஒரு கட்டத்தில் கமலஹாசன் பற்றி எல்லாம் குற்றம் சாற்றி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

மதுமிதா பேட்டி:

இது தொடர்பாக மதுமிதாவின் நண்பர்கள் சொன்னது, பிக் பாஸ் நிகழ்ச்சி தந்த மனக்கசப்பு அவருக்கு ரொம்ப நாளாகவே இருந்தது. நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்தும் விஜய் டிவி மட்டுமில்லாமல் எந்த ஒரு நிகழ்ச்சியுலுமே அவர் கலந்து கொள்ளவில்லை. பொதுநிகழ்ச்சியில் கூட அவர் முகம் காட்டாமல் தான் ஒதுங்கி இருந்தார். ஏற்கனவே ஆன்மீகத்தில் மதுமிதா அதிக நாட்டம் இருந்ததால் அவர் கோயில்களுக்கு பயணம் சென்றிருந்தார். வீட்டில் குழந்தை உடன் நேரத்தில் செலவழித்தார். இந்த சூழலில் தான் கடந்த சீசனே இவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேட்க, அவர் மறுத்துவிட்டார். தொடர்ந்து இந்த சீசனிலும் கூப்பிட்டார்கள். அதனால் தான் கலந்து கொள்ள ஒத்துக் கொண்டார். காலம் மாற்றிவிட்டது என்று சொல்வதை விட எதையும் பாசிட்வாக எடுத்துக் கொள்ளும் நிலைக்கு அவர் வந்துவிட்டார். அதோட வெளிப்பாடுதான் இந்த சீசனில் அவர் கலந்து கொண்டது என்று கூறியிருக்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full