'கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு' பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ போட்ட பெண்- மாளவிகா போட்ட கமண்ட்.

By subhashini · 30/7/2023

தன்னுடைய பாடலின் நடன வீடியோவை பார்த்து வியந்து போய் நடிகை மாளவிகா பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் மாளவிகா. இவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர். அந்த படத்திற்கு பிறகு இவர் மீண்டும் அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே என்ற படத்திலும் நடித்தார்.

இப்படி சினிமாவில் அறிமுகமான சில காலத்திலேயே அஜித்துடன் இரண்டு படங்களில் நடித்த நடிகை என்ற பெருமையை பெற்ற நடிகைகளில் இவரும் ஒருவர். இதனால் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரௌண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அஜித்துடன் நடித்த பின்னர் ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, கந்தா கடம்பா கத்திரவேலா, பேரழகன், வசூலராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, வியாபாரி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என்று பல படங்களில் நடித்து இருந்தார் மாளவிகா.

மாளவிகா திரைப்பயணம்:

மேலும், ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த மாளவிகா கடந்த 2005 ஆண்டு ‘சி யூ அட் நைட்’ என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்தார். அந்த படம் தான் இவரது சினிமா வாழ்க்கைக்கு ஆப்படித்து துரத்தி விட்டது. அந்த படத்தில் நடித்ததற்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து போகவே இவர் படங்களில் துணை நடிகையாகும், ஐட்டம் டான்ஸராகவும் ஆட்டம் போட்டார். பின்னர் டான்ஸராகவும் வாய்ப்புகளும் சரியாக அமையாமல் போனது.

View this post on Instagram

A post shared by Shalini Selvamani (@selfie_shalu.official)

மாளவிகா திருமணம்:

இதை அடுத்து கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் மாளவிகா. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். இவர் திருமணத்திற்கு பின்பும் சில படங்களில் நடித்தார். கடைசியாக இவர் 2009 ஆம் ஆண்டு ஆயுதம் செய்வோம் என்ற படத்திலும் கெஸ்ட் ரோலிலும் நடித்தார். தற்போது மாளவிகா அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீவா- சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் கோல்மால் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

மாளவிகா பாடல்:

இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகை மாளவிகாவின் பாட்டிற்கு ரசிகை ஒருவர் நடனமாடி பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாளவிகா நடித்த படங்களில் ஒன்று வெற்றி கொடி கட்டு. இந்த படத்தை சேரன் இயக்கியிருந்தார். இந்த படம் பிரபலமானதோ இல்லையோ ஆனால் இந்த படத்தில் வந்த கருப்புதான் எனக்கு பிடித்த கலர் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிக்காக தான் இருக்கிறது. இதை வைத்துக் கூட சமீபத்தில் ஒரு விளம்பரம் எடுத்திருந்தார்கள்.

ரீல்ஸ் வீடியோ:

இந்த நிலையில் கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்ற பாடலுக்கு தான் சமூக வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் செல்பி ஷாலு என்ற ஷாலினி நடனமாடி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் நடிகை மாளவிகா போலவே உடை அணிந்து நடனமாடி இருக்கிறார். இதை பார்த்த மாளவிகா, மிகவும் நன்றாக இருக்கிறது என்று பதில் போட்டிருக்கிறார். தற்போது இந்த பதிவு தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்ட்டிங் ஆகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full