'துணிவு' படத்திற்கு முன்பே அஜித்துடன் நடிக்கவிருந்த மஞ்சு வாரியர், எந்தப் படம்னு தெரியுமா?

By krithika · 26/12/2024

24 ஆண்டுகளுக்கு முன்பே அஜித்துடன் ஒரு படத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவிருந்த படம் குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் மஞ்சு வாரியர். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' படம் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை மஞ்சு வாரியர் ஈர்த்தார்.

அதனைத் தொடர்ந்து இவர் அஜித்துடன் இணைந்து துணிவு, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக வேட்டையன், சமீபத்தில் வெளியான வெற்றிமாறனின் விடுதலை 2 போன்ற படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் துணிவு படத்தில், நடிகர் அஜித்திற்கு ஜோடியாக இல்லாவிட்டாலும், படம் முழுவதும் அஜித்தின் சப்போர்ட்டிங் கரெக்டாக நடித்து இருந்தார்‌. ஆனால், 24 ஆண்டுகளுக்கு முன்பே மஞ்சு வாரியர் அஜித்துடன் இணைந்து நடிக்க இருந்தாராம்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்:

அதாவது இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் அஜித், மம்மூட்டி, ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ் உள்ளிட்டோர் நடித்த படம் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் தற்போது வரை இளசுகளின் பிளே லிஸ்டில் இடம்பெற்று இருக்கிறது.

மஞ்சு வாரியர் நடிக்காத காரணம்:

மேலும், இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் தான் முதலில் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் , ந்த நேரத்தில் அவர் திருமணத்திற்கு தயாராகி வந்ததால் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். அதற்குப் பின், அவருக்கு பதிலாக மறைந்த நடிகர் சௌந்தர்யாவை பட குழுவினர் அணுகினார்களாம். ஆனால், அவரும் தான் இரண்டாவது ஹீரோயினாக நடிப்பது சரியானதாக இருக்காது என்று கூறி மறுத்துவிட்டாராம். அதற்குப் பிறகுதான் படக்குழுவினர் ஐஸ்வர்யா ராயை அணுக, அவர் அந்த படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.

மஞ்சு வாரியர் குறித்து :

இவரை மலையாள திரை உலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைப்பார்கள். ஆரம்பத்தில் நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் விளம்பரப் படங்களில் தான் நடித்து இருந்தார். அதற்கு பிறகு மலையாளத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘சாக்ஷியம்’ என்ற படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் திலிப்பின் முன்னாள் மனைவி தான் மஞ்சுவாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

திலீப் – மஞ்சு வாரியர் விவாகரத்து :

நடிகர் திலீப்பும், நடிகை மஞ்சு வாரியரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தார்கள். பின் இருவரும் 1998 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து இருந்தார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற ஒரு மகள் இருக்கிறார். தற்போது தமிழில் மஞ்சு வாரியருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது இவர் தமிழில் ' Mr. X 'என்னும் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் கௌதம் கார்த்திக் மற்றும் ஆர்யா நடிக்கிறார்களாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full