நீங்க என்ன வதந்திகள் கிளப்பினாலும் ஐ டோன்ட் கேர் - தோழியுடன் ரெட்டை ஜடையில் வைப் பண்ணும் மீனா.
பிரபல நடிகை மீனா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி பின் கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதற்கு இடையில் மீனா அவர்கள் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். மேலும், மீனாவின் கணவருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை இருந்ததால் இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதற்குக் காரணம் புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்ததினால் இந்த நோய் ஏற்பட்டது என்று கூறப்பட்டது. பின் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகி சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டார். வித்யாசாகரின் இறப்பிற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள்.
மீனா குறித்து:
மேலும், மீனாவிற்கு ஆறுதலாக அவருடைய தோழிகள்தான் இருக்கின்றார்கள். கணவரின் இழப்பில் இருந்து மீண்டு வந்த மீனா தற்போது மீண்டும் படங்களில் நடித்துக் கொண்டும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றியும் வருகிறார். பிரபலங்கள் மற்றும் கிசு கிசுக்களை பிரிக்கவே முடியாது. அதுவும் நடிகைகள் பற்றிய கிசுகிசுக்கள் அவ்வப்போது வருவது சகஜம்தான். அந்த வகையில் நடிகை மீனா குறித்து பல்வேறு வதந்திகள் சோசியல் மீடியாவில் கிளம்பியது.
வதந்திகளுக்கு மீனாவின் பதிலடி:
அதாவது நடிகை மீனா இரண்டாம் திருமணம் செய்யப் போகிறார் என்ற கிசுகிசு தான் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பிரபல நடிகர் ஒருவரை மீனாவுடன் இணைத்து காதல் கிசுகிசுவையும் சிலர் உலவ விடுகின்றனர் . அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தனது எக்ஸ் தளத்தில், 'வதந்திகளை நம்மை வெறுப்பவர்கள் தான் உருவாக்குகிறார்கள், அதை முட்டாள்கள் தான் பரப்புகிறார்கள், மேலும் அதை அடி முட்டாள்கள் தான் நம்புகிறார்கள்' என்று பதிவிட்டிருந்தார்.
மீனாவின் பதிவு:
மேலும் மீனாவின் இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி இருந்தனர். பின் சிலர் இதுவும் கடந்து போகும் என்று பதிவிட்டும் இருந்தனர். இருப்பினும் சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் மீனா, வீடியோ மற்றும் புகைப்படங்களை தெறிக்க விடுகிறார். அதற்கு ரசிகர்களும் லைக்களை அள்ளி விடுகிறார்கள். அந்த வகையில் நடிகை மீனா தன்னுடைய நெருங்கிய தோழியான நடிகை சங்கீதாவுடன் ஜாலியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
சங்கீதாவின் கமெண்ட்:
அதாவது மீண்டும் பள்ளி பருவத்திற்கு திரும்பிய தோழிகள் இரட்டை ஜடையில் இருப்பதுபோல் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதற்கு, 'உங்களுக்குள் இருக்கும் குழந்தை என்றென்றும் உயிருடன் இருக்கட்டும். இது போன்ற விளையாட்டுகளுக்கு நன்றி' என்று நடிகை சங்கீதாவும் கமெண்ட் செய்துள்ளார். கடைசியாக தமிழில் மீனா ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து இருந்தார். தற்போது மீனா 'ரவுடி பேபி' என்னும் படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.