ஹிந்தி விழா, தமிழில் பேச வேண்டாம் என்று சொன்னவர்களை சிரித்துக்கொண்டே செஞ்சி விட்ட மீனா

By ·

விருது வழங்கும் விழாவில் ஹிந்தியில் பேச சொன்னவர்களிடம் நடிகை மீனா செய்த சம்பவம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின் கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், இவர் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் மற்றும் வெப் சீரியஸ்கள் என்று நடித்து பிசியாக இருக்கும் ஒரு நடிகை. நடிகை மீனா சமீபத்தில் ஐஃபா விருது விழாவில் பங்கேற்றுக் கொண்டிருந்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐஃபா விருது வழங்கும் விழா வருடம் வருடம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான ஐஃபா விருது வழங்கும் விழா அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் சமீபத்தில் நடைபெற்று இருந்தது.

ஐஃபா விருது வழங்கும் விழா:

இந்த விழாவில் பல மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த விழாவில் இந்தியத் திரை உலகை சேர்ந்த சீயான் விக்ரம், கீர்த்தி சுரேஷ், சமந்தா, ஐஸ்வர்யா ராய், மணிரத்தினம், ஏ.ஆர்.ரஹ்மான், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணன், நானி, ஷாருக்கான், ஷாகித் கபூர், ஷபானா ஆஸ்மி உட்பட பலர் கலந்து கொண்டு இருந்தார்கள். இவ்விழாவில் 'பொன்னியின் செல்வன்' படம் ஆறு பிரிவுகளில் விருதை அள்ளி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/shorts/1JFootLSieA

நடிகை மீனா செய்த சம்பவம்:

இந்த விழாவில் நடிகை மீனாவும் கலந்து கொண்டார். ரெட் கார்பெட் வரவேற்பில் செய்தியாளர்களிடம் நடிகை மீனா பேசியிருந்தார். அப்போது, மீனா தமிழில் பேச தொடங்கியவுடன் செய்தியாளர்கள் ஹிந்தியில் பேசுங்கள் மேம் என்று சொன்னார்கள். அதற்கு மீனா இது ஹிந்தியா, அப்போ எப்படி என்னை கூப்பிட்டீங்க என்று கேட்டார். உடனே செய்தியாளர்களில் ஒருவர் நாம் எல்லாமே இந்தியா என்னும் நாட்டில் இருந்து தானே வருகிறோம் என்று சொன்னார்.

ஹிந்தியில் பேசாமல், இங்கிலீஷில் பேசிய மீனா:

அதற்கு நடிகை மீனா சிரித்து இங்கிலீஷில் பேச தொடங்கினார். அதில், தென்னிந்திய படங்கள் மற்றும் தென்னிந்தியர்கள் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு சவுத் இந்தியன் என்பதில் முதலில் பெருமிதம் கொள்கிறேன். ஐஃபா உற்சவம் விருது வழங்கும் விழா தென்னிந்திய மற்றும் வட இந்திய திரைப்படங்களை மற்றும் மக்களை இணைக்கிறது. இது மிகப்பெரிய அற்புதமான நிகழ்ச்சி என்று பேசியுள்ளார். தற்போது நடிகை மீனாவின் இந்த வீடியோதான் சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி வருகிறது.

மீனா குறித்து:

நடிகை மீனா அவர்கள் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மீனாவின் கணவர் கடந்த 2023 ஆண்டு உடல்நிலை பிரச்சனை காரணமாக இறந்துவிட்டார். இவர்களுக்கு நைனிகா என்கிற மகள் இருக்கிறார். நைனிகா தமிழில் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை மீனா தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் இவர் 'ரவுடி பேபி' என்னும் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை