'இனி எப்போது இந்த முகத்தை காண்பேன்' தகன மேடையில் தன் கணவருக்கு கடைசி முத்தம் கொடுத்து கதறி அழுத மீனா - உருக்கமான வீடியோ.

By Rajkumar · 29/6/2022

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் மீனாவின் கணவர் இறந்துள்ள சம்பவம் திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. நடிகை மீனா மற்றும் வித்யாசாகர் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். மேலும், திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் பிறந்தனர். நைனிகா விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். திருமணத்திற்கு பின்னரும் நடிகை மீனா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் இறந்து உள்ள தகவல் தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூரை சேர்ந்தவர். வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்திருக்கிறது. இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதற்கு காரணம் புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்த போது ஏற்பட்ட நோய் என்று கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : எதோ அவருக்கு நேத்திக்கு கொரோனா வந்து செத்துட்ட மாதிரி சொல்றாங்க, அது தவறு - மீனா கணவரின் இறப்பிற்கான காரணம் குறித்து பேசிய அமைச்சர்.

நுரையீரலில் கடும் பாதிப்பு :

அதாவது பெங்களூரில் அவருடைய வீட்டுக்கு பக்கத்தில் நிறைய புறாக்கள் வளர்க்கப்படுகிறது.அதன் அலர்ஜி ஏற்பட்டு சுவாச பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஏற்கனவே இந்த பாதிப்பு இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மீனாவின் கணவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. பின் சிகிச்சைக்கு பிறகு கொரோனா தொற்று சரியானாலும் நுரையீரல் பிரச்சனை வித்யாசாகருக்கு இருந்துகொண்டேதான் இருந்தது.

https://www.youtube.com/watch?v=ySBwiz1_gP8&t=34s

உடல் உறுப்பு கிடைப்பதில் தாமதம் :

இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கிற ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்து சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆரம்பத்தில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தார்கள். அதற்கு மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து நுரையீரல் தானம் கிடைக்கறதா என்று தேடும் பணியில் மீனாவுக்கு நெருக்கமானவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.

மீனாவின் கணவர் இறப்பு:

ஆனால், உறுப்புக்கள் கிடைப்பதில் தாமதமானதால் அறுவை சிகிச்சை இல்லாமலே குணப்படுத்திடலாம் என்று முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், சிகிச்சை பலன் இல்லாமல் நாளுக்கு நாள் வித்யாசாகர் உடல்நிலை மோசமடைந்தது. இறுதியில் இவர் காலம் ஆகி இருக்கிறார். வித்யாசாகரின் இறப்பிற்கு ரஜினி, கலா மாஸ்டர், சுந்தர் சி, ரம்பா, குஷ்பூ போன்ற பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

https://www.youtube.com/watch?v=4G8HC0hty1k

முத்தம் கொடுத்து கதறிய மீனா :

வித்யாசாகரின் உடல் விஷேச ஆம்புலன்ஸ் மூலம் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு வைத்து தனது கணவருக்கு இறுதிச்சடங்குகளை மீனா மேற்கொண்டார். பின்னர் கணவருக்கு முத்தமிட்டு பிரியாவிடை கொடுத்து கதறி அழுதார். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். இதன்பின் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full