தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார். இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்து உள்ளார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

மேலும், இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்டுக் கொடுத்தது. இந்நிலையில் நடிகை மீனா அவர்கள் சோசியல் மீடியாவில் தன்னுடைய தந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஒவ்வொருவருக்கும் ஹீரோ என்றால் தன் தந்தை தான். அப்படிப்பட்ட அப்பாக்களுக்கு மரியாதையும் நன்றியும் செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில் நடிகர் மீனா அவர்கள் மறைந்த தன் தந்தையின் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு தந்தையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நீண்ட வருடங்களுக்கு பின்னர் தற்போது ரஜினிகாந்த் படத்தில் மீனா நடித்து வருகிறார்.

சிவா இயக்கத்தில் ரஜினி காந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா, க்ரீத்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.

Advertisement
Advertisement