அன்புள்ள ரஜினிகாந்த்தில் வந்த 'ரஜினி அங்கிள்' வசனத்தை பேசியது இவர்தானா ?மீனா சொன்ன தகவல.

By Rajkumar · 10/5/2020

தமிழ் சினிமாவில் 40 வயதை கடந்தும் தற்போதும் இளமையாக இருக்கும் பல்வேறு நடிகைகள் இருக்கிறார்கள் அந்த வகையில் பிரபல நடிகையான மீனாவும் ஒருவர்தான். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் நடிகை மீனா. சூப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அதன் பின்னர் அவர் படத்திலேயே கதாநாயகியாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் மீனா.

https://www.instagram.com/p/B_-wX3xhuqC/

ரஜினி, கமல் மட்டுமல்லாது அதற்கு பின் வந்த அஜித், பிரசாந்த் என்று பல்வேறு நடிகைகளுடன் நடித்து விட்டார். மேலும், விஜய்யுடன் 'ஷாஜஹான்' படத்தில் விஜய்யுடன் குத்தாட்டமும் போட்டுள்ளார் மீனா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும், இவரது மகள் பேபி நைனிகாவும் விஜய்யின் தெறி படத்தின் மூலம் குழந்தை நட்ச்சத்திரமாக அறிமுகமானார்.இந்த நிலையில் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம் நேற்று (மே 9) தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில் சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் மீனா.

அதில்,  லதா ரஜினிகாந்த் பாடியிருந்த கடவுள் உள்ளமே என்ற பாடலையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படத்தில் தனது அறிமுக காட்சியையும் பகிர்ந்துள்ளார். முத்துமணி சுடரே வா.. என்ற பாடலையும் பகிர்ந்துள்ள மீனா.. ரஜினி அங்கிள் என்று கூறும் குரல் தன்னுடையது என்றும் கூறியிருக்கிறார். மேலும் ரஜினிகாந்த் தன்னுடைய தாயாரிடம் எந்தக் கடையில் அரிசி வாங்குறீங்க என்று தன்னை கிண்டலடிக்கும் வகையில் கேட்டார் என்றும் ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full