கணவரை பிரிந்து வாடும் மீனாவின் திருமண நாள் இன்று - கடந்த ஆண்டு அவர் பதிவிட்ட பதிவு இதான்.

By Rajkumar · 12/7/2022

கடந்த சில தினங்களுக்கு மீனாவின் கணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூரை சேர்ந்தவர். வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்திருக்கிறது. இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. பெங்களூரில் அவருடைய வீட்டுக்கு பக்கத்தில் நிறைய புறாக்கள் வளர்க்கப்படுகிறது.அதன் அலர்ஜி ஏற்பட்டு சுவாச பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது.அது மட்டுமில்லாமல் ஏற்கனவே இந்த பாதிப்பு இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மீனாவின் கணவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. பின் சிகிச்சைக்கு பிறகு கொரோனா தொற்று சரியானாலும் நுரையீரல் பிரச்சனை வித்யாசாகருக்கு இருந்துகொண்டேதான் இருந்ததுஇதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கிற ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்து சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆரம்பத்தில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தார்கள்.

உடல் உறுப்பு கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் :

அதற்கு மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து நுரையீரல் தானம் கிடைக்கறதா என்று தேடும் பணியில் மீனாவுக்கு நெருக்கமானவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.ஆனால், உறுப்புக்கள் கிடைப்பதில் தாமதமானதால் அறுவை சிகிச்சை இல்லாமலே குணப்படுத்திடலாம் என்று முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், சிகிச்சை பலன் இல்லாமல் நாளுக்கு நாள் வித்யாசாகர் உடல்நிலை மோசமடைந்தது. இறுதியில் இவர் காலம் ஆகி இருக்கிறார்.

பிரபலங்கள் ஆறுதல் :

வித்யாசாகரின் இறப்பிற்கு ரஜினி, கலா மாஸ்டர், சுந்தர் சி, ரம்பா, குஷ்பூ போன்ற பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இது ஒருபுறம் இருக்க தன் கணவரின் இறப்பிற்கு பின்னர் முதன் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார் மீனா அதில் 'எனது அன்புக் கணவர் வித்யாசாகரின் இழப்பால் நான் மிகவும் கலவலையடைந்து இருக்கிறேன். இந்த தருணத்தில் அனைத்து ஊடகங்களும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்து இந்தச் சூழலுக்கு அனுதாபம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மீனா வைத்த வேண்டுகோள் :

இந்த விஷயத்தில் இதற்கு மேல் தவறான தகவல்களை வெளியிடுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.இந்தக் கடினமான நேரத்தில் எனக்கு உதவி செய்து என்னுடைய குடும்பத்திற்கு பக்க பலமாக நின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கடைசி வரை முயன்ற மருத்துவ குழுவிற்கும் முதலமைச்சருக்கும், சுகாதார துறை அமைச்சருக்கும் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களுக்கும் என்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகம் மற்றும் என்னுடைய அன்பான ரசிகர்களுக்கு என்னுடைய நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.

மீனாவின் திருமண நாள் பதிவு :

இப்படி ஒரு நிலையில் மீனாவிற்கு இன்று திருமண நாள். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு தன் திருமண நாளில் மீனா போட்ட பதிவு வைரலாகி வருகிறது. அதில் தன் கணவர் குறித்து பதிவிட்டுள்ள மீனா 'என் வாழ்க்கையில் ஒரு வானவில்லாக வந்து அதை வண்ணமயமாக அழகாக்கி விட்டாய். நாம் இணைந்து இருப்பது தான் என்னுடைய அற்புதமான மற்றும் பிடித்தமான இடம். நீ கொடுத்த சிரிப்பை எப்போதும் நான் அணிந்து இருப்பேன். இனிய திருமண நாள் கணவரே ' என்று பதிவிட்டு இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full