பிக் பாஸுக்கு வந்த நடிகையா இது? என்ன இப்படி ஆகிட்டாங்க- கோர்ட்டில் ஆஜரான மீரா மிதுன்

By subhashini · 17/10/2025

சோஷியல் மீடியாவின் சர்ச்சை நாயகியாக வலம் வந்தவர் மீரா மிதுன். இவர் நடிகை மட்டும் இல்லாமல் மாடலும் ஆவார். இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியிலேயே இவர் சர்ச்சை போட்டியாளராக திகழ்ந்து இருந்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை செய்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் மீராமிதுன் அவர்கள் பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசி இருந்தார்.

இதனால் மீரா மிதுன் மீது பல்வேறு அமைப்புகள் காவல் துறையில் புகார் அளித்து இருந்தார்கள். இதனடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் மீரா மிதுனை கைது செய்து புழல் சிறையில் அடைத்து இருந்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி மீரா மிதுன் மனுத்தாக்கல் செய்திருந்தார். பின் மீரா மிதுன் சிறையிலிருந்து வெளிவந்து இருந்தார். சிறையிலிருந்து வெளிவந்த மீரா மிதுன் நிறைய பேட்டி கொடுத்து இருந்தார்.

மீரா மிதுன் குறித்த தகவல்:

அதுமட்டும் இல்லாமல் மீண்டும் மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு விட்டு இருக்கிறது. பின் இந்த வழக்கு தொடர்பாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து மீரா மிதுனை பிடிக்க பிடிவாரண்ட் போடப்பட்டது. உடனே மீரா மிதுன் தற்போது தலைமறைவாகி இருந்தார். இதை அடுத்து டெல்லியில் இருக்கும் தன்மகளை மீட்டுத் தருமாறு மீரா மிதுன் தாய் மனு தாக்கல் செய்திருந்தார். பின் இதை விசாரித்த நீதிமன்றம், மீரா மிதுனை மீட்டு நேரில் ஆஜராகும் படி காவல்துறைக்கு உத்தரவிட்டது.

மீட்கப்பட்ட மீரா மிதுன்:

இதை அடுத்து டெல்லியில் இருந்த மீரா மிதுனை மீட்டு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய மீரா மிதுன் தன்னுடைய தாயுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரானார். தலைமறைவாகி மூன்று ஆண்டுகளுக்கு பின் மீரா மிதுன் வெளியே வந்து இருக்கிறார். அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர், மீரா மிதுனுக்கு தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் மனிதாபிமான அடிப்படையில் அவர் மீதான பிடிவாரண்ட் வேண்டாம் என்று சொல்லி இருந்தார்.

View this post on Instagram

A post shared by Behindwoods News (@behindwoods_news)

மீரா மிதுன் வீடியோ:

அதற்கு பின் மீரா மீதுனுக்கு எதிரான பிடிவாரண்டை திரும்பப்பெற்று உத்தரவிட்டது. அது மட்டுமில்லாமல் இந்த வழக்கை நவம்பர் 6ஆம் தேதிக்கும் தள்ளி வைத்திருக்கிறார்கள். தற்போது மீரா மீதுன் கோர்ட்டில் ஆஜராகி இருக்கும் வீடியோ தான் வரலாகி வருகிறது. அதை பார்த்த பலருமே, பிக் பாஸ் மீரா மீதுனா! இப்படி அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டாரா? என்றெல்லாம் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full