2017 ஆம் ஆண்டு ‘லை’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை மெகா ஆதர்ஷ். நடிகை மேகா ஆகாஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த ‘பேட்ட’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சென்னையை சேர்ந்த மேகா ஆகாசுக்கு 23 வயது தான் ஆகிறது. ‘மறு வார்த்தை பேசாதே’ என்னும் ஒரே வீடியோ சாங்கில் செம்ம ரீச் ஆகிவிட்டார். அந்த பாடலை தொடர்ந்து பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறி இருந்தார் மேகா ஆகாஷ்.

இதனைத் தொடர்ந்து ‘வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா’ போன்ற படங்களில் நடித்து உள்ளார். நடிகை மேகா ஆகாஷ் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்த வருடம் மட்டும் நிறைய இளம் நடிகைகள் அறிமுகமாகி இருக்கிறார்கள். ஆனால், அறிமுகமான குறுகிய காலத்திலேயே நடிகை மேகா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

Advertisement

அதுமட்டுமில்லாமல் தமிழில் அறிமுகமான ஒரே ஆண்டிலேயே நான்கு படங்கள் நடித்து உள்ளார். ஆனால், இவர் நடித்த எந்த படங்களும் பெரிதளவில் ஹிட் அடிக்கவில்லை. தற்போது யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் நடிகர் விஜய்யுடன் விளம்பர படம் ஒன்றில் நடித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற மேகா ஆகாஷ், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை மேகா ஆகாஷ், விஜய் அஜித் தோனி குறித்து பேசியுள்ளார். அதில் அவர்களை நேரில் பார்த்தால், விஜய்யிடம் டான்ஸ் சொல்லிக்கொடுங்கள் என்று கேப்பேன் என்று கூறியுள்ளார். மேலும், அஜித்தை கண்டால் எப்படி இவ்வளவு ஹாண்ட்ஸ்ஸம்மாக இருக்கீங்க என்று கேட்பேன் என்றும், இந்திய கிரிக்கெட் வீரர் தோனியை கண்டால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன் என்று கூறி இருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement