எனக்கு இரண்டாவது திருமணமா? புகைப்படத்தை பகிர்ந்து மேக்னா ராஜ் கொடுத்த விளக்கம் - என்ன தெரியுமா?
தன்னுடைய இரண்டாவது திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு விளக்கம் அளித்து நடிகை மேக்னா ராஜ் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து இருந்தவர் மேக்னா ராஜ். இவர் 2009ம் ஆண்டு வெளிவந்து இருந்த கன்னட படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து இருந்தார்.
பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. இதனிடையே நடிகை மேக்னா ராஜ் அவர்கள் நீண்ட காலமாக கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து இருந்தார். பின் இவர்கள் இருவரும் 2018-ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்கள். திருமணத்துக்குப் பிறகும் நடிகை மேக்னா ராஜ் தொடர்ச்சியாக படங்களில் நடித்து இருந்தார். இதுவரை நடிகர் சிரஞ்சீவி சர்ஜா 22 படங்களில் நடித்து இருந்தார்.
மேக்னா ராஜ்- சிரஞ்சீவி :
இவர் கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து இருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி சிரஞ்சீவி சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்தி இருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. பின் உடனடியாக இவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த போது அவருக்கு 39 வயது தான் ஆகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேக்னா ராஜ் கணவர் இறப்பு:
இவரின் இறப்பு மொத்த குடும்பத்தையும் பாதித்தது. மேக்னா ரொம்பவே மனமுடைந்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் அப்போது தன் முதல் குழந்தையை மேக்னா வயிற்றில் சுமந்து கொண்டு இருந்தார். தன் முதல் குழந்தையை பார்ப்பதற்குள் சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்து விட்டார். சர்ஜாவின் திடீர் மறைவு கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. கணவர் இறந்த சில மாதத்தில் மேக்னாவிற்கு வளைகாப்பு நடைபெற்றது. அதில் சிரஞ்சீவின் புகைப்படம் முன் அவரது வளைகாப்பு நடைபெற்றது.
மேக்னா ராஜ் பதிவு:
அதன் பின் மேக்னாவிற்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதன் மூலம் இவர் வாழ்க்கையில் சந்தோசம் எட்டி பார்த்தது. மேலும், ஜூனியர் சிரஞ்சீவிக்கு ராயன் ராஜ் சர்ஜா என பெயரிட்டப்பட்டது. தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சியில் மேக்னாராஜ் நடுவராக பங்கேற்று வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார் என்ற செய்தி அடிக்கடி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது குறித்து மேக்னா ராஜ் தன் கணவனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, எனக்கு நீயே வேண்டும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் என் கணவர்.
இரண்டாம் திருமணம் பற்றி சொன்னது:
என்னுடைய கணவர் இறந்த ஒரு வருடத்திலேயே இரண்டாவது திருமணம் பற்றி நிறைய வதந்திகள் வந்தது. ஒரு சிலர் இரண்டாவது திருமணம் செய்து கொள் என்றார்கள். இன்னும் சிலர் மகனுக்காக வாழ வேண்டும் என்றார்கள். அப்படி இருக்கும்போது நான் யார் சொல்வதைக் கேட்பது? நான் இப்போது என்னுடைய மகனின் எதிர்காலம் பற்றிதான் சிந்தித்து வருகிறேன். என்னுடைய கணவர், இந்த தருணத்தை வாழ்ந்துவிட வேண்டும் என்பார். அவர் சொன்னது போல தான் நான் இப்போது வாழ்ந்து வருகிறேன் என்று தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிலடி கொடுத்திருக்கிறார்.