ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை மோஹினியின் தற்போதைய நிலை தெரியுமா !

By Ajju · 19/12/2017
மோஹிணி கிறிஸ்டினா ஸ்ரீனிவாசன் இவர் 1978 ஜூன் 9ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தவர். 1991 ஆண்டு ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தினை கோதண்டா ராமையா இயக்க, இசைஞானி இளையராஜா இசையில் படம் செம்ம ஹிட் ஆனது. இதனால், அறிமுகம் மோஹினிக்கும் தனது முதல் படத்திலேயே ஒரு ப்ரேக் கிடைத்தது. அதன் பிறகு தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்னர், புதிய மன்னர்கள் , நானா பேச நினைப்பதெல்லாம், நாடோடி பாட்டுக்காரன் போன்ற நல்ல படங்களில் நடித்தார். வழக்கமாக வரும் சென்சேஷன் நடிகைகளைப் போலவே நிறைய ஹிட் கொடுத்து சில வருடத்தில் அவுட் ஆப் ஃபீல்டு ஆனார். பட வாய்ப்புகள் குறைய குறைய இவரும் ஒரு முடிவெடுத்து, 1999ஆம் ஆண்டு 'பரத்' என்ற ஒரு பிசினஸ் மேனுடன் திருமணம் செய்துகொண்டு, அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு ருத்ரகேஷ் என ஒரு மகன் உள்ளார். காலப்போக்கில் திருமண வாழ்க்கையும் இவருக்கு பிரச்சனையை தர, 2008ஆம் ஆண்டு கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதி மன்றத்தில் விண்ணப்பித்தார். இருவரும் சரியாக ஆஜர் ஆகாதால் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். கடைசியாக 2011ல் கலெக்டர் என்ற ஒரு மலையாள படத்தில் நடித்தார். அதன் பின்னர் அவரை எந்த படங்களிலும் பார்க்க முடிவதில்லை. இவரது தாய் தந்தையர் இந்துக்கள், ஆனால் அமெரிக்காவில் இருக்கும் போது கிறிஸ்துவ மதத்திற்கு மாறி தற்போது அங்கு கிறிஸ்துவ மத போதாகறாக இருந்து வருகிறார் மோஹிணி கிறிஸ்டினா.
Tamil Behind Talkies AMP · Quick view
View full