அட கடவுளே, காதல்ன்னா நடிகை மிருணாள் தாக்கூருக்கு இவ்வளவு பயமா? காரணம் இது தான்

By subhashini · 24/8/2025

காதல் குறித்து நடிகை மிருணாள் தாக்கூர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக மிருணாள் தாக்கூர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவர் தமிழில் வெளிவந்த சீதாராமம் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதை அடுத்து இவர் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

தற்போது மிருணாள் நடித்த படம் சன் ஆப் சர்தார் 2. இந்த படத்தினுடைய விழாவிற்காக சிறப்பு விருந்தினராக தனுஷ் வந்திருந்தார். உடனே இந்த படத்தில் தனுஷ் நடிக்கிறாரா? இருவருக்கும் ஏதாவது கிசுகிசு இருக்கிறதா? என்றெல்லாம் கூற ஆரம்பித்து விட்டார்கள். அதற்குப்பின் மிருணாள் பிறந்தநாள் விழாவிலுமே தனுஷ் கலந்திருந்தார். அதனை அடுத்து அடிக்கடி தனுஷ் அவர்கள் மிருணாள் உடைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.

மிருணாள்-தனுஷ் சர்ச்சை:

இதனால் இருவரும் டேட்டிங் செய்கிறார்கள், காதலிக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் பரவ தொடங்கியது. பின் சமீபத்தில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் மிருணாள் தாக்கூர், தனுஷ் எனக்கு நல்ல நண்பர். சமீபத்தில் எங்கள் இருவரையும் பற்றி நிறைய வதந்திகள் பரவிருப்பது அது எனக்குமே தெரியும்.
அதை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. சன் ஆப் சர்தார் 2 நிகழ்வில் தனுஷ் கலந்து கொண்டது பற்றி தவறாக எடுத்துக் கொண்டார்கள். தனுஷ்- அஜய் தேவ்கானுக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது.

மிருணாள் தாக்கூர் பேட்டி:

அஜய் தேவ்கான் தான் தனுஷை அந்த நிகழ்விற்கு அழைத்து இருந்தார். அந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்காக எங்களை இப்படி இணைத்து பேசினார்கள். தேவையில்லாமல் எங்களைப் பற்றி தவறான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது என்று கூறியிருந்தார். இதன் மூலம் தனுஷ்-மிருணாள் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் காதல் குறித்து நடிகை மிருணாள் தாக்கூர் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் அவர்,
காதல் என்றாலே எனக்கு ரொம்ப பயம்.

காதல் பற்றி சொன்னது:

எனக்கு முன்பு கிடைத்த அதே அன்பு இப்போது கிடையாது என்று என்னுடைய துணை சொன்னால் ஏற்றுக்கொள்வேன். ஆனா,ல் துரோகம் செய்யப்படுமோ என்ற பயம் இருக்கிறது. உண்மையான காதல் தான் எனக்கு ரொம்ப முக்கியம். பள்ளி மற்றும் கல்லூரி கால நண்பர்களுடன் இன்னும் நான் தொடர்பில் இருக்கிறேன். எல்லாம் சரியானவர் என்று நினைக்கும் ஒருவருடன் வாழ விரும்பவில்லை. காதல் தோல்வியை சந்தித்தாலும் அது வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்வேன் என்று கூறியிருக்கிறார்.

தனுஷ் குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் குபேரா. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் தனுஷ் அவர்கள் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்திருந்தார். 18 வருடம் இவர்களுடைய குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது. பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் தான் இவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full