என்னை எல்லோரும் அருவருப்பாக பார்த்தார்கள், காரணம் இது தான் - மேடையிலே கண்கலங்கி மும்தாஜ் சொன்ன விஷயம்

By subhashini · 24/2/2025

மதரஸா திறப்பு விழாவில் நடிகை மும்தாஜ் அழுது கொண்டே பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவை பொறுத்த வரை கவர்ச்சி நடிகைகள் பலர் வந்து சென்றாலும் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மும்தாஜ். இவர் 1999 ஆம் ஆண்டு இயக்குனர் டி. ராஜேந்தர் இயக்கிய “மோனிஷா என் மோனோலிசா” என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதனை அடுத்து இவர் விஜய் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியாகியிருந்த குஷி என்ற படத்தில் நடித்திருந்தார். அதிலும் அந்த படத்தில் ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ என்ற பாடல் படத்தில் அளவில் பிரபலமானது. அதனைத் தொடர்ந்து இவர் மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, காதலா காதலா, வேதம், சாக்லேட், மிட்டா மிராசு, ஏழுமலை, லண்டன், வீராசாமி போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

மும்தாஜ் குறித்த தகவல்:

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து இருந்தார். இருந்தாலும், இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களின் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையவே சினிமாவிலிருந்து இவர் விலகினார். அதன் பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்குப் பின் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மும்தாஜ், புர்காவில் மட்டுமே காணப்படுகிறார். மேலும், இவர் மெக்கா, மதினா போன்ற இடங்களுக்கு சென்று இருக்கிறார்.

விழாவில் மும்தாஜ்:

இப்படி இருக்கும் நிலையில் மதரஸா திறப்பு விழாவில் எமோஷனலாக கண்கலங்கி மும்தாஜ் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் கிராமத்தில் பெண்கள் மதரஸா திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்று வந்தது. இதில் அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள், நடிகர்கள் என பலருமே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார்கள். அந்த வகையில் இந்த விழாவில் நடிகை மும்தாஜூம் கலந்து கொண்டிருந்தார். அதில் அவர்,
என்னைப் பற்றியும், என்னுடைய வாழ்க்கையைப் பற்றியும், நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை பற்றியும் உங்கள் அனைவருக்கும் தெரியும்.

https://www.youtube.com/watch?v=D-iW7ibY66w

சினிமா பற்றி சொன்னது:

என்னை நிறைய பேர் திட்டி இருக்கிறீர்கள். எனக்கு நிறைய பேர் பிரார்த்தனையும் செய்திருப்பீர்கள். இன்று உங்கள் முன்னே இஸ்லாமிய பெண்ணாக நின்று பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இதற்கு முன்பெல்லாம் நான் வெளியே சென்றாலே முஸ்லிம் பெண்கள் என்னை ஒரு மாதிரியாக அருவருப்பாக பார்ப்பார்கள். அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். ஆனால், இப்போது உங்கள் முன் இப்படி நிற்பது சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் எது சரி, எது தவறு
என்று தெரியவில்லை. தவறு செய்ய வேண்டும் என்று என்னுடைய தலையில் இருந்தது.

மதம் பற்றி சொன்னது:

அந்த நேரத்தில் இதுபோல பெண்கள் பள்ளி எதுவும் இல்லை. இருந்தாலுமே என்னுடைய மதத்தை பற்றி எதுவும் தெரியாத ஆள் நான் கிடையாது. சின்ன வயதில் அழகாக இருக்கிறீர்கள், நடிக்கிறீர்களா என்று பலர் சொன்னார்கள். அதை நம்பி நடிக்கப் போனதுதான் நான் செய்த தவறு. நாங்கள் நடனம் ஆடும்போது ஜீன்ஸ், மினி ஸ்கர்ட் போட்டு ஆடும் போது எல்லோருமே என்னை கீழ பார்ப்பார்கள். அது எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கும். அந்த நேரத்தில் யாராவது அன்புடன் சொல்லி இருந்தால் நான் சீக்கிரமாகவே மாறி இருப்பேன். வெளியில் செல்லும்போது என்னுடன் பலருமே புகைப்படங்கள் எடுப்பார்கள். அப்போது இஸ்லாமிய பெண்கள் என்னை கோபமாக பார்ப்பார்கள். இப்போது இறைவனின் அருளால் எவ்வளவு அன்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று ரொம்ப எமோஷனலாக கண்கலங்கி பேசி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full