லிங்கு சாமி ஷூட்டிங்கில் இருந்து வந்த அதிர்ச்சி தகவல் - நதியா உட்பட இத்தனை பேருக்கு கொரோனாவாம்.

By Rajkumar · 20/8/2021

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். தமிழ் சினிமாவில் கே வி ஆனந்த், மாறன், பாண்டு, ஆட்டோகிராப் கோமகன் என்று பலர் கொரோனா தொற்று ஏற்பட்டு காலமானார். கொரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பல பிரபலங்கள் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரண்டு தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டு பிரபல நடிகை நதியா அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இப்படி ஒரு நிலையில் நதியா உட்பட்ட அவரது குடும்பத்தனர் உட்பட சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.நடிகை நதியா தெலுங்கில் லிங்குசாமி இயக்கி வரும் படத்தில் நடித்த போது அங்கே அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் ஷெடுலை முடித்து வீடு திரும்பிய நதியா, இரண்டாம் ஷெடுயூலில் கலந்துகொள்ள இருந்த போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக படக்குழுவில் இருந்து தகவல் சொல்லியுள்ளார்கள். ''நான் ரெண்டு டோஸ் வேக்சினேஷனும் போட்டுட்டேன். எனக்கு எப்படி கொரோனா வந்ததுனே தெரியல. என்னோட அப்பா, அம்மா, வீட்ல வேலை செய்றவங்கனு நாலு பேருக்கும் கொரோனா வந்துடுச்சு. வீட்லயே தனிமைப்படுத்திக்கிட்டு இருக்கோம்' என்று கூறியுள்ளார் நதியா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full