90ஸ் கனவுக்கன்னி நக்மாவா இது ? எப்படி இருந்தவங்க இப்போ எப்படி ஆகிடாங்க பாருங்க. (ராகுல் காந்தியுடன் அவர் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ.

By subhashini · 14/5/2022

நக்மாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ்களை குவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் 90 ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருந்தவர் நடிகை நக்மா. இவருடைய உண்மையான பெயர் நந்திதா மொராஜி. திரை உலகிற்கு நக்மா என்று மாற்றிக் கொண்டார். இவர் ஆரம்பத்தில் தன்னுடைய நடிப்பு பயணத்தை பாலிவுட்டில் தான் தொடங்கியிருந்தார். பின் சில படங்கள் ஹிந்தியில் நடித்துவிட்டு தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார் நக்மா.

2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்த காவலன் படத்தின் மூலம் தான் நக்மா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் கார்த்திக், பிரபுதேவா,ரஜினி,நெப்போலியன் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார். மேலும், தென்னிந்திய படங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் நக்மா இங்கேயே அதிக கவனம் செலுத்த தொடங்கி இருந்தார்.

நக்மாவின் திரைப்பயணம்:

அதிலும் பாட்ஷா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நக்மா நடித்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனதும் நக்மா உடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு இருந்தது. அதன் பின் நக்மாவின் மார்க்கெட் எகிறியது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், வங்காளி, போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

நக்மா கடைசியாக நடித்த படம்:

பின் இடைப்பட்ட காலத்தில் கதாநாயகியாக வாய்ப்பை இழந்த நக்மா நீண்ட இடைவெளிக்கு பின் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘தீனா’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருந்தார். அதுமட்டும் இல்லாமல் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த சிட்டிசன் படத்தில் ஒரு சிபிஐ அதிகாரியாக நடித்திருந்தார். அதன் பின்னர் நக்மா போஜ்புரி படங்களில் கவனம் செலுத்தி இருந்தார். மேலும், சிட்டிசன் படத்திற்கு பின்னர் இதுவரை எந்த ஒரு தமிழ் படத்திலும் நக்மாவை காண முடியவில்லை.

நக்மாவின் சகோதரி:

மேலும், நடிகை நக்மா அவர்கள் ஜோதிகாவின் சகோதரி என்பது பலரும் தெரிந்த ஒன்று. ஜோதிகாவும் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். சினிமா திரையுலகில் ஜோதிகா சாதித்த அளவிற்கு நக்மாவால் சாதிக்க முடியாமல் போய்விட்டது. அதோடு நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் நக்மா அரசியலில் குதித்து விட்டார்.

நக்மாவின் லேட்டஸ்ட் புகைப்படம்:

தற்போது ஒரு முக்கிய அரசியல் கட்சியில் பதவியில் இருக்கிறார். இந்த நிலையில் நக்மாவின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதில் நக்மா பார்ப்பதற்கு அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி போய் படு குண்டாக இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் காதல் பட நக்மாவா இது! என்று ஷாக்கில் கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full