பார்த் டே பார்ட்டி - காதலருடன் போதைப்பொருள் பயன்படுத்திய ஸ்ரீகாந்த் பட நடிகை கைது.

By Rajkumar · 16/6/2021

கடந்த சில மாதங்களாக போதை பொருள் விவகாரம் சினிமா உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் மரணத்தை தொடர்ந்து அவரது முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார். அதே போல கன்னட சினிமா துறையிலும் போதை பொருள் பயன்படுத்திய விவாகரத்தில் கன்னட நடிகர் ராகினி திவேதி, நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் சஞ்சனா கல்ராணி ஜாமினில் வெளியில் வந்தார்.

இப்படி ஒரு நிலையில் போதை பொருள் பயன்படுத்தியதாக தமிழ் பட நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான படம் 'மிருகா'. ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்த இந்த படத்தின் லட்சுமி ராய் நாயகியாக நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் நடிகை நைய்ரா ஷா. இவர் இந்தி மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இப்படி ஒரு நிலையில் காதலருடன் நட்சத்திர ஓட்டலில் போதை மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த பிறந்தநாள் விழா ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு போலீசார் சென்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் நடிகை நைய்ரா ஷா என்பவர் சிகரெட்டில் போதைப்பொருளை வைத்து புகைத்தது கண்டறியப்பட்டது.

நைய்ராவின் பிறந்தநாள் பார்டியில் போதை பொருளை பயன்படுத்தி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் நடிகை நைய்ரா ஷா மற்றும் அவரது காதலரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவர்கள் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து நைய்ரா ஷாவும் அவரது காதலரும் போதை பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் ஜாமீனில் இருவரும் விடுவிக்கப்பட்டனர். 

Tamil Behind Talkies AMP · Quick view
View full