விஜயால் தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு தான் - உண்மையை போட்டுடைத்த நடிகை நமீதா

By ·

விஜய் அரசியல் பற்றி நடிகை நமீதா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேனி அருகே போடி சாலையில் தனியார் நிறுவனத்தின் உடைய பிரியாணி கடை திறப்பு விழாவிற்கு நமீதா சென்று இருந்தார். இதை திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளரும், மக்களவை உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்திருந்தார்.

மேலும், இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். நடிகை நமீதாவை பார்க்க ஏராளமான ரசிகர்கள் அந்த இடத்தில் கூடியிருந்தார்கள். கடை திறப்பு விழா முடிந்ததுமே செய்தியாளர்களை சந்தித்த நடிகை நமீதா, திறமையான புதுமுக நடிகர்களை உருவாக்குவதற்காக சென்னையில் நடிப்பு கற்றுக் கொள்வதற்காக நானும் என்னுடைய கணவரும் சேர்ந்து ஒரு பள்ளியை திறந்து பல்வேறு வகுப்புகள்
நடத்தப்பட்டு வருகிறது என்று பேசி இருந்தார்.

நமீதா பேட்டி:

உடனே அங்கிருந்த செய்தியாளர் ஒருவர், விஜயின் அரசியல் - அஜித்தின் கார் ரேசிங் குறித்தும் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு நமீதா, புதிய மற்றும் திறமையான நடிகர்கள் திரைத்துறையில் வாய்ப்புகள் வழங்க வேண்டும். நடிகர் விஜய் ஒரு சிறந்த நடிகர். பிரபுதேவா, ஜூனியர் என்டிஆர் வரிசையில் சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர். அவர் அரசியலுக்கு சென்றது தமிழ் சினிமாவிற்கு ஒரு பெரிய இழப்புதான் என்று கூறியிருக்கிறார்.

விஜய் பற்றி சொன்னது:

தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் நமீதா. ஒரு காலத்தில் பல இளைஞர்களின் கனவு அறிமுகமான திகழ்ந்தவர் நடிகை நமிதா. தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நமிதா. இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம்.

நமீதா குறித்த தகவல்:

இவர் விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். பின் நமிதாவிற்கு சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். திருமணத்திற்கு பின் நடிகை நமீதா அவர்கள் படங்களில் நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full