மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகி மீது நடிகை நமிதா வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு - காரணம் இதுதான்
கோயில் நிர்வாகி மீது நடிகை நமிதா வைத்திருக்கும் குற்றச்சாட்டு தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் நமிதா. ஒரு காலத்தில் இவர் ரசிகர்களின் கனவு கண்ணியாக இருந்தவர். தமிழில் விஜயகாந்த் நடித்த 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம்தான் நமிதா அறிமுகமானார். ஆனால், அதற்கு முன் இவர் சில தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பழமொழி படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் சினிமாவில் அறிமுகமான கொஞ்ச நாட்களிலேயே இளைஞர்களின் மத்தியில் தனக்கென்ன ஓர் இடத்தை பிடித்து விட்டார். அதன் பின், இவர் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது நடிப்பாவல் தன் பக்கம் இழுத்தார். அதோடு இவர் அனைவரையும் 'மச்சான்' என்றுதான் செல்லமாக அழைப்பார். அதனால் இவர் இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவுக்கு பிரபலமானார் என்று சொல்லலாம்.
நமிதா குறித்து:
பின், உடல் எடை கொஞ்சம் அதிகரித்த பிறகு நமிதாவிற்கு சினிமா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்தார். அதன்பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலம் பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்று காத்திருந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் நமிதாவிற்கு பெரிதாக சினிமா பட வாய்ப்புகள் அமையவில்லை.
நமிதா திருமணம்:
பின், இவர் 2017 ஆம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர சௌவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. இதற்கிடையே சொந்தமாக ஓடிடி தளத்தை நடிகை நமிதா வைத்திருக்கிறாராம். தற்போது இவர் டிவி நிகழ்ச்சிகள், கல்லூரி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்று வருகிறார். அதுமட்டுமில்லாமல், ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் என்று தெரிய வருகிறது. இந்நிலையில் தற்போது நமிதா வெளியிட்டிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமிதா வெளியிட்ட வீடியோ:
அதில், அனைவருக்கும் வணக்கம். இன்று நான் ஜென்மாஷ்டமி கொண்டாடுவதற்காக மதுரை வந்திருக்கிறேன். கிருஷ்ணரோட பக்தர்களாகிய நாங்கள் அனைவரும் சேர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போயிருந்தோம். ஆனால், அங்கு போனதும் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இன்னைக்கு வரைக்கும் நான் நிறைய கோயிலுக்கு போய் இருக்கேன். ஆனால், யாரும் என்கிட்ட இப்படி பேசினது கிடையாது. அங்க கோவிலில் இருக்கிற ஒரு நிர்வாகி என்கிட்ட ரொம்ப கடுமையாக நடந்து கொண்டார். அவர் என்கிட்ட மட்டும் அப்படி கிடையாது என் கணவர் கிட்டையும் அப்படித்தான் நடந்து கொண்டார்.
நமிதா வேதனை:
என்னவென்று கேட்டால், நீங்க இந்து மதத்தை சேர்ந்தவர் தான் என்ற சான்றிதழை காட்டுங்கள் என்றார். இன்னைக்கு வரைக்கும் யாரும் என்கிட்ட இப்படி கேட்டதே கிடையாது. ஏனென்றால் இந்தியாவில் இருக்கிற அனைவருக்கும் தெரியும் நான் ஒரு இந்து என்று. மேலும், என் திருமணம் கூட இஸ்கான் திருப்பதியில் தான் நடந்தது. நான் என்ன நினைக்கிறேன் என்றால், எவ்வளவு பெரிய அதிகாரிக்கு ஒருத்தர்கிட்ட எப்படி நடந்துக்கணும் என்று கூட தெரியவில்லை. அதனால், பி.கே சேகர் பாபு சார் இதுகுறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நாங்கள் பாதுகாப்பாக தரிசனம் மேற்கொள்ள உதவியோர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். தற்போது, நமிதாவின் இந்த வீடியோ தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.