மல்லிகைப் பூ வச்சது குத்தம்மா? லட்சக்கணக்கில் அபராதம் கட்டிய நடிகை நவ்யா நாயர் - நடந்தது என்ன?

By subhashini · 8/9/2025

நடிகை நவ்யா நாயருக்கு லட்ச கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகை நவ்யா நாயர். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த நடன கலைஞரும் ஆவார். இவர் முதன் முதலாக 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த இஷ்டம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின் இவர் மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

மேலும், இவர் மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் இவர் அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக் கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். அதற்கு பின் இவருக்கு தமிழில் சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை மீண்டும் இவர் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்தார். இதனிடையே இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நவ்யா நாயர் குறித்த தகவல்:

இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற ஒரு மகனும் உள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிகை நவ்யா நாயர் அவர்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். அதன் பின் இவர் டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கு பெற்று வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நவ்யா நாயருக்கு லட்ச கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. அதாவது விக்டோரியாவின் மலையாள சங்கம் ஏற்பாடு செய்த ஓணம் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள நடிகை நவ்யா நாயர் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார்.

நவ்யா நாயருக்கு அபராதம்:

ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மல்லிகை பூவை பெண்கள் சூடி கொள்வது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் கொச்சியில் இருந்து புறப்படும் போது நடிகை நவ்யா நாயர் தன்னுடைய தந்தை வாங்கி தந்த மல்லிகை பூவை எடுத்துச் சென்றிருக்கிறார். அதில் அந்த பூவை இரண்டு துண்டாக வெட்டி முதல் பாதி தலையில் வைத்தும், இன்னொன்றை பையில் வைத்தும் சென்றிருக்கிறார். ஆனால், ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் வெளிநாடுகளில் இருந்து தாவர பொருட்களைக் கொண்டு வருவதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. இதனால் விதிமுறையை மீறி நவ்யா நாயர் சுமார் 15 சென்டிமீட்டர் அளவு கொண்ட மல்லிகை பூவை எடுத்துச் சென்றதால் அவருக்கு 1.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=nVlgDUfk-k8

நவ்யா நாயர் பதிவு:

இந்நிலையில் இது தொடர்பாக நடிகை நவ்யா நாயர், என்னுடைய தந்தை எனக்கு மல்லி பூவை வாங்கி தந்திருந்தார். அதை அவர் இரண்டாக வெட்டி என்னிடம் கொடுத்தார். கொச்சிலிருந்து சிங்கப்பூர் வரை ஒன்றை என் தலையில் வைத்துக் கொண்டேன். நான் சென்றடையும் நேரத்தில் அது வாடி விடும் என்பதால் சிங்கப்பூரிலிருந்து பயணித்த போது இன்னொரு துண்டை என்னுடைய பேகில் வைத்தேன். ஆனால், ஆஸ்திரேலியா சட்டப்படி செல்லக்கூடாது என்பது எனக்கு தெரியாது. இது அறியாமையில் தான்
நடந்தது. 15 சென்டிமீட்டர் மல்லிகை பூ கொண்டு வந்ததற்காக அதிகாரிகள் என்னிடம் ஒன்றரை லட்சம் அபராதம் செலுத்துமாறு சொன்னார்கள். தவறு என்றால் தவறுதான். 28 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full