சினிமாவால் என் வாழ்க்கை மாறும்ன்னு நினைக்கல - நடிகை நயன்தாராவின் உருக்கமான பதிவு
தன்னுடைய சினிமா பயணம் குறித்து நடிகை நயன்தாரா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மீடியாவில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டு வாங்கும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
மேலும், சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் பாலிவுட்டில் நயன் நடித்த ஜவான் படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டது. அதை அடுத்து கடைசியாக நயன் நடித்த டெஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை அடுத்து இவர் மண்ணாங்கட்டி, மூக்குத்தி அம்மன் 2, டியர் ஸ்டுடென்ட்ஸ் என பல மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
நயன்தாரா திரைப்பயணம்:
இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது நயன்தாரா அவர்கள் கவினுடன் சேர்ந்து ஹாய் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை விஷ்ணு எடவன் இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.
நயன்தாரா படங்கள்:
இந்த படத்தில் பாக்கியராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா, குரேஷி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கான வேலைகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதே போல் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் நயன்தாரா கமிட் ஆகியிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய சினிமா பயணம் தொடர்பாக நடிகை நயன்தாரா அவர்கள் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா பதிவு:
அதில் அவர், கேமரா முன் நின்று இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த நேரத்தில் சினிமா தான் என்னுடைய வாழ்க்கையாக மாறிவிடும் என்று எனக்கு தெரியாது. ஒவ்வொரு பிரேமும் ஒவ்வொரு காட்சியும் இன்று என்னை செதுக்கியிருக்கிறது. சினிமாவுக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்குமே நன்றி என்று கூறியிருக்கிறார்.