ஒரே நேரத்தில் மூன்று மாநில விருதுகள், நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் - நெகிழ்ச்சியில் நயன்தாரா பதிவு
சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு கௌரவிக்கும் வகையில் வருடம் வருடம் தமிழக அரசு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டில் முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் பல ஆண்டுகளாக வழங்காமல் இருந்த விருதுகள் கடந்த 13ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்த விருது விழாவில் தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி, ரகுமான் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு விருதுகளை வாங்கி இருந்தார்கள்.
அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு வெளியான அறம் படத்தில் கலெக்டராக நடித்த நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான நெற்றிக்கண் மற்றும் கூழாங்கல் படங்களுக்கும் விருது வழங்கப்பட்டது. ஆனால், இந்த விருது விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொள்ளவில்லை.
நயனுக்கு கிடைத்த விருது:
ஆக மொத்தம் மூன்று விருதுகளை தமிழ்நாடு அரசு நயன்தாராவிற்கு வழங்கி இருக்கிறது. இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நயன்தாரா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், அறம் படத்திற்காக எனக்கு மாநில விருது வழங்கி கௌரவித்த தமிழ்நாடு அரசுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். எங்களுடைய தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நெற்றிக்கண் மற்றும் கூழாங்கல் படங்களுக்கும் மாநில விருதுகள் கிடைத்த இடத்திற்கு நன்றி.
நயன்தாரா பதிவு:
மூன்று மாநில விருதுகள் உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்று எமோஷனலாக பதிவிட்டிருக்கிறார். இதற்கு பலரும் நடிகை நயன்தாராவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
நயன்தாரா குறித்த தகவல்:
அந்த வகையில் இவர் கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
சமீபத்தில் நயன்- சீரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நயன்தாரா அவர்கள் தமிழில் மண்ணாங்கட்டி, ராக்காயி, ஹாய், கன்னடத்தில் யாஷ் உடன் டாக்சிக், மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் மற்றும் மோகன்லால் மம்முட்டியுடன் சேர்ந்து பேட்ரியாட் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதோடு சில ஆண்டுகளாக நயன்தாரா பிசினஸ் வுமனாக அவதாரம் எடுத்திருக்கிறார்.