கேலிக்கு உள்ளான நயன்தாராவின் Candid போஸ் - காரணம் என்னன்னு பார்த்தா சிரிப்பீங்க. (கேஷுவலா இருக்காராம்)

By Rajkumar · 16/4/2021

தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட காலம் நிலைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. சொல்லப்போனால் நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.

https://twitter.com/sanjay17mus/status/1381316509499187203

இவர் சினிமாத்துறைக்கு முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் தான் அறிமுகமானர். பின்னர் தமிழில் 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது நடிகை நயன்தாரா அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : இது தான் கர்ணன் படத்திற்கு முதலில் வைத்திருந்த பெயர் - படத்தின் முக்கிய பிரபலம் சொன்ன தகவல்.

என்னதான் பிஸியாக நடித்து வந்தாலும் பாண்டியை என்றால் சொந்த ஊரானா கொச்சிக்கு வந்து சென்று விடுவார். அதிலும் எப்போதும் தனது காதலருடன் தனி விமானத்தில் தான் வருவார் நயந்தாஹ்ரா. சமீபத்தில் நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனி விமானத்தில் சென்று இருந்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

https://twitter.com/ManojKu58305530/status/1381049413854920704

அதே போல சமீபத்தில் சென்ற தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு நடிகை நயன்தாரா தனது காதலருடன் தனி விமானத்தில் கொச்சிக்கு சென்றார். அப்போது நயன்தாராவை வளைத்து வளைத்து போட்டு எடுத்து பதிவிட்டார் விக்னேஷ் சிவன். அதிலும் ஒரு புகைப்படத்தில் செல் போனை நொண்டிய படி மிகவும் கேசுவலாக நயந்தாரா போஸ் கொடுத்து இருந்தார். ஆனால், அந்த புகைப்படத்திற்கு எதார்த்தமாக போஸ் கொடுக்க வேண்டும் என்று நயந்தாரா, தனது செல்போனை ஆன் செய்யாமலேயே போஸ் கொடுத்துள்ளார் என்று பலரும் கேலி செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full