சுயநலத்துக்கு பின்னால் ஒரு பொதுநலம் இருக்கு - நாப்கின் பிஸ்னஸ் குறித்து மனம் திறந்த நயன்தாரா.

By subhashini · 11/1/2024

சுயநலத்துக்கு பின்னால் ஒரு பொதுநலம் இருக்கிறது என்று தன்னுடைய புது தயாரிப்பு பொருள் குறித்து நடிகை நயன்தாரா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

மேலும், சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். கடைசியாக நயன் நடித்த படம் அன்னபூரணி. இது நயன்தாராவின் 75வது படமாகும். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இதை அடுத்து இவர் பல கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார். இப்படி நயன் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தொழிலதிபராகவும் கலக்கிக் கொண்டு வருகிறார்.

தொழிலதிபர் நயன்தாரா:

சில ஆண்டுகளாக நயன்தாரா பிசினஸ் வுமனாக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் முதலில் அழகு சாதனப் பொருள் தயாரிப்பில் கால் தடம் பதித்திருக்கிறார். தீ லிப் பாம் கம்பெனி என்று தன்னுடைய நிறுவனத்திற்கு பெயர் வைத்திருக்கிறார். இந்த நிறுவனத்தை நடிகை நயன்தாரா, சரும மருத்துவர் நிறுவனத்தை ராஜன் என்பவருடன் இணைந்து துவங்கினார். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதை அடுத்து கடந்த ஆண்டு 9ஸ்கின் என்ற சரும பாராரிப்பு தயாரிப்புகளை நயன் அறிமுகப்படுத்திருந்தார்.

நயன்தாரா தயாரிப்பு நிறுவனம்:

இது சருமத்திற்கான கிரீம், சீரம், ஆயில் போன்ற பொருட்களை வழங்குகிறது. இதனுடைய ஆரம்ப விலை 99 ரூபாய், அதிகபட்சம் 1899 ரூபாய் ஆகும். இந்த நிறுவனம் வெளியான சில மாதங்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனை அடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் 'Femi 9' என்ற நாப்கின் தயாரிப்பை நயன் அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த தயாரிப்பும் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக சேலம் மாவட்டத்தில் சங்ககிரியில் நடந்த பெமினா விழாவில் நடிகை நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் உடன் கலந்து கொண்டிருந்தார்.

நாப்கின் குறித்த விழிப்புணர்வு:

விழாவில் நயன்தாரா, சானிட்டரி நாப்கின் குறித்த விழிப்புணர்வு நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சென்றடைய வேண்டும். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்களுடைய நோக்கம். பெண்கள் நன்றாக இருந்தால் சமுதாயமும் நன்றாக இருக்கும். சுயநலத்துக்கு பின்னால் இருக்கும் பொது நலம் என்னுடைய வணிகத்தை நியாயப்படுத்துகிறது. சானிட்டரி குறித்த விழிப்புணர்வு பெரும்பாலோனரை சென்றடையவில்லை. இது குறித்த விழிப்புணர்வு அனைத்து பெண்களையும் சென்றடைய வேண்டும்.

கணவர் குறித்து சொன்னது:

மேலும், ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார். அதேபோல் சாதித்த பெண்களுக்கு பின்னால், ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் பெண்களுக்கு பின்னால் கண்டிப்பாக ஒரு ஆண் இருப்பார். அப்படித்தான் எனக்கு பின்னால் என்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் இருக்கிறார். அவரை சந்தித்த முதல் நாளிலிருந்து எனக்கு அவர் துணையாக இருக்கிறார். நான் எந்த விஷயம் செய்வதாக என்றாலும் எதற்கு ஏன் என்று கேள்வி கேட்காமல் அந்த விஷயத்திற்கு அவர் உறுதுணையாக இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இதோடு ஏன் நிறுத்துகிறீர்கள்? இன்னும் நீங்கள் சாதிக்க வேண்டும் என்று ஊக்குவிக்கவும் செய்கிறார் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full