நான் இத ஜோக்கா சொல்லல, என்கிட்ட ராங்கு பண்ணா உன் வாழ்க்கை- நயன் எச்சரிக்கை பதிவு

By Rajkumar · 24/8/2024

நடிகை நயன்தாரா இன்ஸ்டா ஸ்டோரி மூலம் எச்சரித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக லேடிஸ் சூப்பர் ஸ்டாராக நயன்தாரா கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும், சமீபகாலமாக இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக நயன் நடித்த படம் 'அன்னபூரணி'. இது நயன்தாராவின் 75வது படமாகும். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை எடுத்து இவர் கோலிவுட், பாலிவுட் என்ன பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

நயன்தாரா திருமணம்:

இப்படி கோலிவுடில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்த நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சுமார் 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து, கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் விக்கி- நயன் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. வாடகைத் தாய் மூலம் அவர்கள் இந்த குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர், உலக் என்று அவர்கள் பெயர் வைத்தது நாம் அறிந்ததே.

குழந்தைகளுக்கு நல்ல தாய்:

மேலும், குழந்தை பிறந்த பின்னரும் சினிமாவில் நடித்து வரும் நயன்தாரா, எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் கூட தங்களது குழந்தைகளை கூட்டிக்கொண்டு சீனாவுக்கு சுற்றுலா சென்று இருந்தனர் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி. அங்கு தங்களது இரண்டாவது திருமண நாளை அவர்கள் கொண்டாடினார்கள். மேலும், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது சமூக வலைதள பக்கங்களில் எப்போதுமே படு ஆக்டிவாக இருக்கிறார்கள்.

நயன்தாரா இன்ஸ்டா ஸ்டோரி:

குறிப்பாக நடிகை நயன்தாராவை, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 8.7 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். அதில் அவர், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை பகிர்தல், தனது பிசினஸ் குறித்து தகவல்களை பகிர்தல், ஹெல்த் கேர் டிப்ஸ், சினிமா அப்டேட்கள் போன்ற பதிவுகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா தனது இன்ஸ்டால் ஸ்டோரியில் சில வரிகளை பதிவிட்டுள்ளார்.

நயன்தாராவின் எச்சரிக்கை பதிவு:

அதில், நான் தெய்வீகமாக பாதுகாக்கப்படுகிறேன் என்பதை நான் விளையாட்டாக சொல்லவில்லை என்று புரிந்து கொள்ளுங்கள். அப்படி நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டால், உங்கள் வாழ்க்கை சிதைந்து விடும் என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவை பார்த்து ரசிகர்கள், இந்த எச்சரிக்கை யாருக்காக இருக்கும் என்று குழம்பி வருகிறார்கள். தற்போது நயன்தாராவின் இந்த இன்ஸ்டா ஸ்டோரி தான் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full