பெயரை மாற்றிக்கொண்ட நீலிமா - காரணம் இது தானாம்.

By Rajkumar · 7/6/2020

தமிழ் சினிமா உலகில் மக்கள் மத்தியில் பரிச்சயமான நடிகைகளில் நீலிமா ராணியும் ஒருவர். தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகளை விட வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு சென்ற நடிகைகள் தான் அதிகம். அந்த வரிசையில் வந்தவர் தான் நடிகை நீலிமாராணி. இவர் 1992 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் விரும்புகிறேன், தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

மேலும், சமீப காலமாக நடிகைகள் நடிகர்கள் உடன் சேர்ந்து ‘டூயட்‘ பாடுவதை தவிர்த்து வருகிறார்கள். கதாநாயகர்களுக்கு சமமாகே நடிகைகள் படங்களில் நடித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து சாதனை பெண்மணிகளின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளிவர தொடங்கி உள்ளன. நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா போன்ற பல முன்னணி நடிகைகள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடித்து வருகிறார்கள்.

இந்த வரிசையில் தற்போது நடிகை நீலிமாராணியும் சேர்ந்து இருக்கிறார். இவர் படங்களில் துணை கதாநாயகியாக நடித்து உள்ளார். தற்போது இவர் ‘கருப்பங்காட்டு வலசு’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் நடிகை நீலிமா ராணி அவர்கள் ஜோதிடர் ஒருவரின் அறிவுரையை ஏற்று தனது பெயரை மாட்டி கொண்டு உள்ளார். இவர் தன்னுடைய பெயரை ‘நீலிமா இசை’ என்று மாற்றியிருக்கிறார். இது குறித்து நீலிமாவிடம் கேட்டதற்கு அவர் கூறியது,

நான் கருப்பங்காட்டு வலசு என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம் குற்றப்பின்னணியில் திகிலான கதையம்சம். ஒரு பெண் பழைய பழக்க வழக்கங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட ஒரு கிராமத்தை ‘மாடர்ன்’ ஆக மாற்ற முயற்சிக்கிறார். அப்போது அந்த ஊரில் ஒரு குற்றம் நடக்கிறது. அதன் விளைவுகள் தான் இந்த திரைக்கதை. இந்த படத்தை செல்வேந்திரன் இயக்குகிறார். என் ஜோதிடர் அறிவுரையின் படி என்னுடைய பெயரை நான் மாற்றி கொண்டேன் என்று கூறினார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full