தன்னை குண்டு என்று சொன்னவர்களுக்கு நித்யா மேனன் கொடுத்த தக்க பதிலடி !

By Ajju · 28/3/2018
நடிகர் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். படங்களில் நடிகத்துவங்கும் போதே சற்று பப்லியான் தோற்றத்தில் தான் இருந்தார். தமிழ்,தெலுகு,மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்துள்ள நித்யா மேனன் விஜய் ,விகர்ம்,சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துவிட்டார்.பொதுவாக உணவு கட்டுப்பாட்டிலோ, உடற்பயிற்சிகளிலோ பெரிதாக நாட்டம் இல்லாத இவர் சில மாதங்களாக உடல் எடை கூடி பருமனாக ஆகிவிட்டார். சமீபத்தில் இவர் குண்டாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் பரவ அதனை பலரும் கிண்டல் செய்தனர் ஆனால் நான் குண்டாக இருப்பது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை.மேலும் நான் குண்டாக இருப்பது ஒருநாளும் எனக்கு தடையாக இருந்ததில்லை படங்களுக்காகவே நான் அப்படி இருந்தேன். ஆனால் இனி வரும் படங்களில் நான் கண்டிப்பாக மெலிந்தே காணப்படுவேன் என்று தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு மறு தாக்குதல் கொடுத்து பேசியுள்ளார் நித்யா மேனன்.தற்போது ப்ராண என்ற தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பன்மொழியில் வெளியாகவுள்ள படத்தில் நடித்து வருகிறார் நித்யா மேனன்
Tamil Behind Talkies AMP · Quick view
View full