உண்மையான மனிதர்கள் எல்லா வடிவங்களிலும் இருப்பார்கள் - நடிகை நித்யா மேனன் ஓபன்
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் நித்யா மேனன். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 180 என்ற படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் விஜய்யுடன் மெர்சல், சூர்யாவுடன் 24, விக்ரமுடன் இருமுகன் என்று தமிழில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
பின் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளிவந்த சைக்கோ படத்தில் நித்யா நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் பெரிதாக படங்களில் காணவில்லை. இடைப்பட்ட காலத்தில் குண்டாக இருந்த நித்யா மேனன் உருவக் கேலிக்கு உள்ளாகி இருந்தார். இதனால் உடல் எடையை குறைக்க முடிவு செய்த நித்யா மேனன் அவர்கள் சித்தா மற்றும் சில உடற்பயிற்சிகளை மேற்கொண்டு இருந்தார். அதன் பலனாக இவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வரத்துவங்கி இருக்கிறது.
நித்யா மேனன் திரைப்பயணம்:
அந்த வகையில் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தில் நித்யா மேனன் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்ததற்காக தேசிய விருதும் நித்யா மேனன் வாங்கியிருந்தார். கடந்த ஆண்டு இவர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளிவந்த காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் தலைவன் தலைவலி படத்தில் நடித்து இருக்கிறார்.
தலைவன் தலைவி படம்:
இந்த படத்தில் தீபா வெங்கட், சரவணன், ரோஷினி, சுரேஷ், யோகி பாபு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது. கணவன்- மனைவி இடையே நடக்கும் சண்டையை மையமாக வைத்து இயக்குனர் இந்த படத்தை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். இந்த படம் இதுவரை 25 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் நித்யா மேனனின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
நித்யா மேனன் பேட்டி:
அதுமட்டுமில்லாமல் கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு விதியை மாற்றி தனக்கான கதைகளை தேர்வு செய்து நடித்து வெற்றியும் பெற்றிருக்கிறார் நித்யா மேனன். இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் நித்யா மேனன், நடிகை என்றால் ஒல்லியாக தான் இருக்க வேண்டும் என்று அழுத்தம் இப்போது அதிகமாக எல்லாத் துறைகளிலும் இருக்கிறது. குறிப்பாக சினிமா துறையில் ஒல்லியாக இருந்தால்தான் வாய்ப்புகளும் வருவதாக சொல்கிறார்கள். எல்லோரும் கவனிக்கும் மேலோட்டமானதை கடந்து வேறு ஏதாவது ஒன்றை பேசும் வகையில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
உடல் எடை பற்றி சொன்னது:
அது எனக்கு ரொம்பவே முக்கியம். மக்கள் உணர்ச்சியின் ஆன்மாவின் தாக்கத்தை உணரும் வகையில்
நடிப்பது, அது அவர்கள் கண்களை மட்டும் அல்ல இதயத்தையும் தாக்கும். அதுதான் எனக்கு ரொம்ப முக்கியம். என்னுடைய குறிக்கோள் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பில் தோற்றமளிப்பது கிடையாது. அதை அழகாக செய்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். ஆனால், நான் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிக்க விரும்புகிறேன். உண்மையான மனிதர்கள் எல்லா வடிவங்களிலும் வருகிறார்கள். நாம் அனைவரும் ஒரே மாதிரி தெரிவதில்லை. நாம் அப்படி இருக்க வேண்டியதும் கிடையாது. நான் எதார்த்தமான படங்களை உருவாக்க உண்மையான தோற்றத்தில் தோன்றுவது ரொம்பவே முக்கியம். தலைவன் தலைவன் படத்தில் எனக்கு மேக்கப் மேன் கிடையாது. நான் எப்படி இருக்கிறேனோ அப்படித்தான் நடித்தேன் என்று கூறியிருக்கிறார்.