தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல்வேறு நடிகைகள் தற்போது கதாநாயகிகளாக கலக்கி கொண்டு வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பான சிறுவர்கள் விரும்பிய தொடர் மைடியர் பூதம். இந்த தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இருப்பவர் நிவேதா தாமஸ். அதன் பின்னர் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

மேலும், உலக நாயகன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்ட பட்டது. அதன் பின்னர் ஜெய் நடிப்பில் வெளியான ‘நவீன சரஸ்வதி சபதம் ‘ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படம் சுமாரான வரவேற்ப்பை பெற்றிருந்தது. அந்த படத்திற்கு பின்னர் தமிழில் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

Advertisement

இருப்பினும் தெலுங்கில் ஒரு சில படங்கள் நடிக்க அங்கு அவருக்கு பெரிய வரவேற்பு இருந்தது. அதன் பின்னர் தெலுங்கில் உள்ள ஒரு சில இளம் நடிகர்களுடன் நடித்து விட்டார். நடிகை நிவேதா தாமஸ் தளபதி விஜயுடன் ஜில்லா படத்தில் நடித்து இருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

மேலும, நடிகை நிவேதா தாமஸ் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதே விஜய் பாத்தில் தான் நடிகை நிவேதா தாமஸ், ஜில்லா படத்திற்கு முன்பாகவே விஜய்க்கு தங்கையாக ‘குருவி’ படத்தில் நடித்திருக்கிறார் என்பது பலரும் அறியாத ஒன்று. அந்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Advertisement