ஓவியாவின் லேட்டஸ்ட் பதிவில் சர்ச்சை வீடியோ குறித்து குவிந்த கமெண்ட்ஸ்- ஓவியாவின் நச் பதில்கள்

By subhashini · 13/10/2024

தன்னுடைய ஆபாச வீடியோ குறித்து நடிகை ஓவியா கொடுத்திருக்கும் பதிலடி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஓவியா. இவர் மாடலிங் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்குப்பின் இவர் விமல் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த ‘களவாணி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் ஓவியா நடித்திருந்தார்.

இருந்தாலும், இவருக்கு பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பு மலையாளத்தில் ‘கங்காரு’ என்ற படத்தின் மூலம் தான் சினிமாவிற்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு இவருக்கு வாய்ப்புகள் சரியாக அமையாததால், ஒரு சில படங்களில் ஓவியா குத்தாட்டம் போட்டிருந்தார். பின்னர் சினிமாவில் கொஞ்சம் காலம் எங்கு இருந்தார் என்று தெரியாமல் இருந்தார். பின் இவர், 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து இருந்தார்.

ஓவியா குறித்த தகவல்:

முதல் சீசனில் பங்கு பெற்ற மற்ற போட்டியாளர்களை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து‌‌. அதோடு இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அது மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கு ஆர்மி என்ற ட்ரெண்ட் இவரால் தான் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இவருடைய எதார்த்தமான குணமும், பேச்சும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது என்றுதான் கூற வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, ஓவியா பெரிய நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிக் பாஸுக்கு பிறகு:

பின் சிலுக்குவார்பட்டி சிங்கம், 90 எம்எல், கணேஷா மீண்டும் சந்திப்போம், காஞ்சனா 3, களவாணி 2 போன்ற பல படங்களில் ஓவியா நடித்தார். ஆனால், அவர் நடித்த படங்கள் அவரது கேரியரை காலி செய்து விட்டது என்று தான் கூற வேண்டும். அதற்குப் பிறகு ஓவியா பெரிதாக படங்களில் கமிட்டாகவில்லை. இருந்தாலும், சிறிய இடைவெளிக்கு பின் இவர் மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இது குறித்து பலரமே அதிர்ச்சியில் கமெண்ட் போட்டு இருந்தார்கள்.

ஓவியா வீடியோ:

சிலர் இது உண்மையான வீடியோ இல்லை என்றும் சிலர் இது ஓவியா தான் என்றெல்லாம் கமெண்ட் போட்டு இருந்தார்கள். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன் கேள்விகளுக்கு ஓவியா பதில் அளித்து இருந்தார். அப்போது நெட்டிசன் ஒருவர், உங்களுடைய 17 வினாடி வீடியோ லீக் ஆனது மேடம். அதற்கு உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஓவியா, என்ஜாய் என்று சொல்லி இருக்கிறார். இன்னொருவர், வீடியோவினுடைய நீளம் ரொம்ப குறைவாக இருக்கிறது. அதிக நீளம் உள்ள வீடியோ கிடைக்குமா? என்று கேட்டிருக்கிறார்.

ஓவியா பதிலடி:

அதற்கு ஓவியா, வீடியோ அடுத்த முறை ப்ரோ என்று பதில் சொல்லி இருக்கிறார். அதற்குப்பின் பலருமே ஓவியாவின் லீக்கான ஆபாச வீடியோவை அனுப்புங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஓவியா, லிங்க் இருந்தால் அனுப்பி விடுங்கள் என்று பதில் கொடுத்திருக்கிறார். இப்படி ஓவியா கொடுத்திருக்கும் பதில் தான் ரசிகர்கள் மத்தியில் பாராட்டு பெற்றிருக்கிறது. காரணம், பொதுவாகவே நடிகைகள் தங்களுடைய ஆபாச வீடியோ, புகைப்படம் எதுவாக இருந்தாலும், தான் இல்லை என்று மறுப்பு தெரிவித்து தங்களுடைய ஆதங்கத்தை கொட்டி இருப்பார்கள். ஆனால், ஓவியா அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கூலாக பதிலளித்திருக்கிறார். இதனால் தான் ஓவியாவிற்கு ஆர்மி உருவாக்கி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full