நடிகைகள் மத்தியில் வைரலாகும் கருப்பு வெள்ளை சேலஞ் - அஜித் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட என்னை அறிந்தால் பட நடிகை.
அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் அஜித் அருண்விஜய் த்ரிஷா, அனுஷ்கா ஷெட்டி, பார்வதி நாயர் ,விவேக் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தார்கள். இதில் பார்வதி நாயர் மட்டும் தமிழ் சினிமாவிற்கு புதுமுகமாக அறிமுகமாகி இருந்தார்.
தனது முதல் படத்திலேயே அஜித் படத்திலேயே நடித்த அதிர்ஷ்டம் இவருக்கு கிடைத்திருந்தது.என்னை அறிந்தால் படத்திற்கு முன்பாகவே தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘நிமிர்ந்து நில் ‘ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்தார் பார்வதி நாயர்.என்னை அறிந்தால் படத்திற்கு பின்னர் இவர் உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், வெள்ள ராஜா போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருபவர். அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் டீ -ஷர்ட் வியர் சேலஞ் மற்றும் பில்லோ வியர் சேலஞ் என்று இரண்டு சேலஞ்கள் வைரலாகி வந்தது. அதை நடிகைகள் அனைவரும் செய்தனர். இந்த நிலையில் தற்போது WomenSupportingWomen என்ற ஹேஷ் டேக் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
https://www.instagram.com/p/CDWGclGjuow/
அதில் நடிகைகள் ஒருவருக்கு ஒருவர் சேலஞ் செய்து கருப்பு வெள்ளை புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், இதை மற்ற நடிகைகளையும் டேக் செய்து வருகின்றனர். இந்த சேலஞ்சை ஏற்றுத்தான் தற்போது பார்வதி நாயர் இந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தை வெளயிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை அஜித் தான் எடுத்தாராம். இதுகுறித்து கூறியுள்ள பார்வதி நாயர்,