60 வயது நடிகரை நாலாவது திருமணம் செய்த வீட்ல விசேஷம் பட நடிகை ? - அட, இவங்களா ? (மகேஷ் பாபுவின் புதிய அண்ணியா ? )

By subhashini · 24/6/2022

60 வயது உடைய நடிகருக்கு வீட்ல விசேஷம் பட நடிகை பவித்ரா லோகேஷ் நான்காவது மனைவியாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் பவித்ரா லோகேஷ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பதாய் ஹோ’ படத்தின் ரீமேக். இந்த படம் 220 கோடி வரை வசூலித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இதை தமிழில் வீட்ல விசேஷம் என்ற பெயரில் எடுத்து இருக்கிறார்கள். இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி, நடித்து இருக்கிறார்.

வீட்ல விசேஷம்:

இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்து இருக்கிறார். மேலும், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்து உள்ளனர். அதேபோல் இந்த படத்தில் கதாநாயகிக்கு அம்மாவாக பவித்ரா லோகேஷ் நடித்து இருக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நரேஷ்-பவித்ரா காதல் :

இந்த நிலையில் இவர் பிரபல நடிகருக்கு நான்காவது மனைவியாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சகோதரரும், நடிகருமான நரேஷ் என்பவரை தான் நடிகை பவித்ரா லோகேஷ் திருமணம் செய்திருக்கிறார். நரேஷ் அவர்கள் நடிகர் மட்டும் இல்லமால் தயாரிப்பாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

நரேஷ்-பவித்ரா திருமணம்:

மேலும், பவித்ரா-நரேஷ் இருவரும் நடிகர் சங்க தேர்தலில் இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது நடிகர் நரேஷுக்கு 60 வயதாகிறது. இவர் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து ஆளுக்கு ஒரு வீட்டில் வைத்து குடித்தனம் நடத்தி வருகிறார். அதேபோல் தற்போது பவித்ராவுக்கு 43 வயதாகிறது.

நரேஷ்-பவித்ரா திருமணம் குறித்த சர்ச்சை:

பவித்ராவும் ஒருவருக்கு இரண்டாவது மனைவியாக இருந்தார். இந்த நிலையில் இருவரும் முறைப்படி விவாகரத்து பெறாமல் திருமணம் செய்து இருப்பதாகவும், அதன் காரணமாகவே தங்களின் திருமண அறிவிப்பை ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது உண்மையா? வதந்தியா? என்பது தெரியவில்லை. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் பங்கமாக கிண்டல் செய்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full