once upon a time there lived a ghost - பழைய புகைப்படங்களை பகிர்ந்த ரசிகர் - Comeback குறித்து சொன்ன பூஜா.

By subhashini · 2/7/2022

சினிமாவில் மீண்டும் கம்பேக் குறித்து பூஜா அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூஜா. இவர் 1984 ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள கொழும்புவில் பிறந்தவர். இவருடைய முழு பெயர் பூஜா உமாசங்கர் வேதகன். இவரது அப்பா ஒரு கன்னடர், அம்மா ஒரு சிங்களர், கணவர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. பூஜா அவர்கள் தனது பள்ளிப்படிப்பை கொழும்புவில் முடித்து கல்லூரி படிப்பிற்காக பெங்களூர் வந்தார்.

பெங்களூரில் மவுண்ட் கார்மல் காலேஜில் பி.காம் படித்தார். அதன் பின்னர் கம்பெனியில் மேனேஜராக வேலை செய்து இருந்தார். அப்போது அவருடைய நண்பர் இயக்குனர் ஜீவா மூலம் பூஜாவிற்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ‘உள்ளம் கேட்குதே’ என்ற படத்தில் தான் நடிகை பூஜா முதன் முதலாக நடித்தார். ஆனால், இந்த படம் வெளியாக தாமதமானதால் சரண் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜே ஜே’ படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

பூஜா நடித்த படங்கள்:

அதன் பிறகு இவர் ஜித்தன், பட்டியல், தம்பி, நான் கடவுள், ஓரம் போ, துரோகி, விடியும் முன் என பல படங்களில் நடித்து இருந்தார். அதிலும், குறிப்பாக பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த நான் கடவுள் என்ற திரைப்படத்தின் மூலம் பூஜா மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் பூஜா தன்னுடைய இலங்கைக்கு சென்று விட்டார். இவர் அங்கேயே பல படங்களில் நடித்து வந்தார்.

பூஜா திருமணம்:

மேலும், சில வருடங்களுக்கு முன்பு தான் இவர் இலங்கையை சேர்ந்த தமிழ் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். கடைசியாக பூஜா 2015 ஆம் ஆண்டு வெளிவந்த கடவுள்பாதி மிருகம்பாதி என்ற தமிழ் படத்தில் நடித்தார். அதன்பின்னர் இவர் இலங்கை மொழி படத்தில் நடித்து இருந்தார். பிறகு பூஜா என்ன ஆனார்? என்றே தெரியவில்லை. மேலும், பூஜா சோசியல் மீடியாவில் பெரிதாக ஆக்டிவாக இல்லை என்றாலும் ட்விட்டரில் தன்னுடைய ரசிகர்களுடன் அவ்வப்போது பேசுவார்.

பூஜா குறித்து ரசிகரின் டீவ்ட்:

இந்நிலையில் ரசிகர் ஒருவர் பூஜா குறித்து டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ஒரு காலத்தில் பூஜா ஒரு லிவ்டு கோஸ்ட் ஆக இருந்தார் என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதோடு பூஜாவின் சில புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்களையும், பதிவையும் பார்த்த பூஜை நிகழ்ச்சி அடைந்து பழைய நினைவுகளை நினைவு கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

கம்பேக் குறித்து பூஜா சொன்னது:

அது மட்டுமில்லாமல் அந்த ரசிகருக்கு பூஜா நன்றி தெரிவித்திருந்தார். அதன் பின்னர் ரசிகர் ஒருவர் பூஜாவிடம் நீங்கள் கம்பேக் கொடுக்கலாமே? என்று கேட்டார். அதற்கு பூஜா சொன்னது, எனக்கு 44 வயது ஆகிவிட்டது. இனியும் கம்பேக் கொடுப்பது என்றால் சித்தி கதாபாத்திரம் தான் பண்ணனும் என்று ஜாலியாக பதிவிட்டிருக்கிறார். இப்படி பூஜா பதிவிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full